Monday, October 29, 2012

29-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

29-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௧௩(13)திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

புது தில்லி NCR பகுதியில் வசிக்கும் மக்கள் கவனத்திற்கு

நாம் ஒன்று சேர்ந்து பணிகள் செய்ய அனைத்தும் நமக்கு நலமாக முடியும் எனும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இவ்வருட தீபாவளிக்கு தேவையான இனிப்பு/கார வகைகளை நாம் ஒன்று பட்டு  அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொழுது குறைந்த விலையில்நல்ல பொருள்களை வாங்க முடியும் அல்லது  இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும் எனும் முடிவுடன் ஒரு புது முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் துவங்கியுள்ளது. உங்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பவும்.

1.    உணவு வகைகளின் விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் தனியாக வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.

2.    உங்கள் தேவையை 31-10-2012 க்குள் அனுப்பவும்.

3.    இது புது முயற்சி என்பதால், உங்கள் ஒத்துழைப்பு தேவை, எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதைப்  பொறுத்தே அடுத்த நடவடிக்கை.

இது நாம் நம் மேல் கொண்டிருக்கும் ஒற்றுமையையும் , நம்பிக்கையையும் பரிசோதிக்கும் ஒரு முயற்சியும் கூட.

அனுப்ப வேண்டிய தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பொருள்களை சேர்ப்பிக்க வேண்டிய விலாசம்.

Item

No. of Pieces or Kg

Pack

Normal/Gift  

Mixture (மிக்ஸர்)

 

 

Ladoo (லட்டு)

 

 

Jangiri (ஜாங்கிரி)

 

 

Bhadhusha (பாதுஷா )

 

 

Thenkuzhal (தேன்குழல்)

 

 

Ribbon pakoda (ரிப்பன் பகோடா)

 

 

Mysorepa (மைசூர்பா)

 

 

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1300 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 30 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

Explanation:

மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

குறளும் பொருளும் – 1301

காமத்துப்பால் கற்பியல் – புலவி

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.

Translation:

Be still reserved, decline his profferred love;

A little while his sore distress we 'll prove.

பொருள்:

ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

Explanation:

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.  

உங்களுக்குத் தெரியுமா?

மாலைத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - யாஹூ! 

இதுவே கடைசி அமைச்சரவை மாற்றம் - தினமணி 

அமைச்சரவை மாற்றத்தில் ஆந்திராவுக்கு ஜாக்பாட் - தினகரன் 

இந்திய கிராண்ட்ப்ரீ வெட்டல் சாம்பியன் - தினமணி 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது - தினத் தந்தி 

7.7 ரிக்டர் அளவில் பதிவானது கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ... - தினத் தந்தி 

கேரளாவில் கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மியூசியம்  - நியூஇந்தியாநியூ

ரூ.9 கோடி மதிப்புள்ள ஹெராயின் ரயிலில் பறிமுதல்: இருவர் கைது - யாஹூ! 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது - தினத் தந்தி

"டிட்கோ'விற்கு புதிய தலைவர் நியமனம் - யாஹூ!

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இன்று கோட்டையை ... - தினத் தந்தி 

புதிய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு - தினத் தந்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை ...4தமிழ்மீடியா

இயக்கத்தை பிரபலப்படுத்த இந்தி நடிகர் அமீர்கானை இழுக்க அன்னா ... - தினத் தந்தி 

புயல் தாக்கும் அபாயம் அமெரிக்காவில் பல முக்கிய நகரங்களில் ... - தினத் தந்தி 

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா ... - தினத் தந்தி 

பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் ... - தினத் தந்தி      

கங்கைக் குளியல் பாவம் போக்குமா? 

புனித கங்கை எனப் போற்றப்படும் நதியில் பலர் நீராடிக் கொண்டிருந்தார்கள்.  கரையிலிருந்து பலர் நீராடத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். பரமசிவனும் பார்வதியும் ஆகாய மார்க்கமாகச் சென்ற வண்ணம் அக்காட்சியைக் கண்டனர்.  அப்போது பார்வதி தேவி பரமனிடம், "நாதா, கங்கையில் நீராடும் அத்தனை பேருக்கும் பாவங்கள் தொலைந்து விடுமா? " என்றாள்.  அதற்குப் பரமன், நீராடும் அத்தனை பேருக்கும் பாவங்கள் தொலைவைதில்லை என்றார். "அது ஏன் சுவாமி? " என்றாள் அன்னை பராசக்தி. "இப்போது நாமிருவரும் கங்கைக் கரையில் இறங்குவோம். நான் சொல்வதுபோல் நீ செய். அப்போது உன் கேள்விக்கு விடை கிடைக்கும்" என்றார் பரமன்.

 

பரமன் தீட்டிய திட்டப்படி அவரும் அன்னை பராசக்தியும் வயதான தம்பதியராக மாறி கங்கைக் கரையில் இறங்கினர். இறைவன் நதியில் நீராடுவதற்காக தள்ளாடியபடி இறங்கினார்.  அவரை கங்கை நதி இழுத்துச் சென்றது. கரையிலிருந்த அன்னை பராசத்தி, " ஐயோ! என் கணவர் ஆற்றோடு போகிறார், யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கூக்குரலிட்டாள்.  அதைக் கேட்ட கரையிலிருந்தவர்களில் பலர் ஆற்றில் குதிக்க முற்பட்டனர்.  அவர்களைத் தடுத்த அன்னை பராசத்தி, "ஐயா, உங்களில் யார் எந்தப் பாவமும் செய்யாதவரோ அவர் மட்டுமே என் கணவரைக் காப்பாற்ற முடியும் !"    என்கிறாள்.  அதைக் கேட்ட பலரும் மலைத்து நின்று அவரவர் செய்த பாவங்களை எண்ணி ஆற்றிக் குதித்து முதியவரைக் காப்பாற்ற தயங்கினார்கள்.  ஆனால் ஒரே ஒருவன் மட்டும் படக்கென்று கங்கையில் ஒரு முழுக்குப் போட்டு எழுந்து, "இப்போது நான் செய்த பாவங்கள் எல்லாம் போய்விட்டன.  நான் அவரைக் காப்பாற்றுகிறேன்" என்று சொல்லி கங்கை ஆற்றில் குதித்துப் பரமனைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தான்.  பரமசிவனும் பார்வதியும் அவனுக்கு மட்டும் காட்சியளித்துவிட்டு மறைந்தனர்.  கைலாயம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இறைவன் இறைவியிடம் கேட்டார்.  "தேவி, இப்போது சொல் கங்கையில் நீராடும் அனைவருக்கும் பாப விமோசனம் கிடைக்கிறதா ?" அன்னை பராசக்தி  " புரிந்து கொண்டேன் நாதா !"   என்று சொல்லி புன்னகைத்தாள். 

article by Brig (Retd) V.A.M Hussain

Competitions

Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085 latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

29/10/2012

6.30 PM

தில்லி தமிழ் சங்கம்

கர்நாடக இசை மேதை டி.வி கோபாலகிருஷ்ணன் குழுவினர் வழங்கும் "இன்னிசை கச்சேரி "

 

dhillitamilsangam@gmail.com

03/11//2012 Sat - 4 PM

 

B-10 Shiv Mandhir

Sector 34

Noida

NamaSankeerthanam by "KALYANI MARGABANDHU & GROUP"

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Badri V    9312590372

Suresh S   9811933299

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

14/11/2012

4 DAYS Pilgrimage to Chitrakoot & back

Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: