குறளும் பொருளும் - 1142 காமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல் மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். Translation: The village hath to us this rumour giv'n, that makes her mine; Unweeting all the rareness of the maid with flower-like eyne. பொருள்: மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். Explanation: Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me. உங்களுக்குத் தெரியுமா? சுராசிக் காலம் என்பது 20 கோடி ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 14.4 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான தொன்மா என்ற டைனாசோர்களின் வல்லாட்சிக் காலத்தை குறிக்கும். "நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...) சனி நீராடு நம்முடைய வாழ்க்கைமுறை, கொழுப்பு சார்ந்த உணவு வகைகள், மது பானங்கள், புகைத்தல், ஆகியன உடலுக்குள் சூட்டை அதிகம் செய்கிறது, இத்துடன் காற்றின் மாசுத்தன்மை, உடல் அயர்ச்சி, கோடை வெப்பம் ஆகியன இச்சூட்டை மேலும் அதிகரிக்கிறது. இந்த உள்சூட்டால் மூட்டு வலி, மூட்டுப் பிடிப்பு, இடுப்பு வலி ஆகியன அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சமச்சீரின்மையால் எளிதில் சினம் கொள்ளும் தன்மை,கண்களில் சிவப்புத் தன்மை, தூக்கமின்மை போன்றவற்றையும் அதிகரிக்கும். இதற்கு ஒரு பரிபூரண விடை எண்ணைக் குளியல். எண்ணையை தலையிலும் உடலிலும் சேர்த்து, நன்றாக ஊறி, சிகைகாய் அல்லது அரப்புத்தூள் சேர்த்து வெந்நீரில் குளித்த சுகம் என்ன என்று அதை அனுபவித்தவர்களை கேட்டுப்பாருங்கள், எண்ணைக் குளியலுக்கு குற்றாலம், ஓஹேனக்கல் என்று சென்று காசு கொடுத்து அடிவாங்கி வருபவர்களும் உண்டு. எண்ணைக் குளியலின் முக்கியம் ஊறிக் குளிப்பது, அடிவாங்கி குளிப்பது அல்ல. எண்ணைக் குளியல் ஏன் ? எண்ணையில் ஊறும்போது நமதுதோல் இளன்சூடாகி அதன் கீழ் பகுதியில் உள்ள இரத்த நாளத்தை தளர்த்துகிறது. அதனால் குருதி மிக சுலபமாக உடலில் ஜோராகப் பாய்கிறது, இரத்தம் நன்றாகப் பாயும்போது, பிராணவாயு அதிகம் கிடைக்க, அதன் பலன் என்ன என்பதை முன்பே எதிரும் புதிரும் தொடர்சி... ( திரும்பப் படிக்க http://atsnoida.blogspot.in/2012/03/30-03-2012-daily-newsletter-kuralum.html) என்ற விளக்கத்தில் பார்த்தோம். பலன், ஒரு அருமையான இளைபாற்றல் மற்றும் அடுத்த வார அலைச்சலுக்கு தயார் என உடல் சந்தோசத்துடன் சொல்லும் ஒரு உணர்ச்சி. தினமுமே தலைக்கு மட்டும் சிறிது எண்ணை தேய்த்து குளிப்பது கூட அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் கழிய உதவும். இத்துடன் ஸ்கின் கேன்சர் வராதபடி ஒரு தடுப்பு, வைரஸ், பாக்டீரியா ஆகியவிடமிருந்து பாதுகாப்பு, தோலுக்கு ஒரு ஒளிர்வு, நல்ல தூக்கம் வர உதவுதல், மூட்டு வலிகளிருந்து விடுதலை என பல பயன்கள் ஏன் சனிக்கிழமை? எண்ணைக் குளியலுக்கு பிறகு தேவையானது ஓய்வு. அந்நாளில் அதிக வெயிலில் செல்லுதல், பளுவான வேலைகளைச் செய்தல் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும். எனவே, ஒருவார வேலைக்குப் பின் சனிக்கிழமை எண்ணை தேய்த்துக்கொள், ஓய்வெடு என்று இந்த சொல் வந்ததோ? தெரியாது.. ஆனால் விஷயம் எண்ணை தேய்த்துக் குளிப்பது நல்லது என்பதே. பெண்களுக்கு ஒரு நாள், ஆண்களுக்கு ஒருநாள் என வேறு வேறு தினங்கள் ஏனெனில், எண்ணைக் குளியலுக்குப் பிறகு ஓய்வு அவசியம் எனவேதான் இரு தனி தினங்கள். யோசித்துப் பாருங்கள் வெள்ளிக்கிழமை பெண்களுக்கு, சனிக்கிழமை ஆண்களுக்கு என ஒதுக்கியுள்ளனர். அதாவது வாரக்கடைசியில் ஒரு புத்துணர்ச்சிக் குளியல். அலுவலகம்/பாடசாலை செல்லும் பெண்கள் வெள்ளிக் கிழமையை விட விடுமுறை நாளிலேயே எண்ணைக் குளியல் செய்து ஓய்வெடுப்பது நல்லது. அப்போதுதான் அதன் மருத்துவப் பலன் கிட்டும். எண்ணெய் தேய்க்கும் முறை விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் என்ற வரிசையில் எண்ணெய் குளியல் நல்லது. முதல் எண்ணையின் வழவழப்பு, அடுத்த எண்ணையின் விலை இவற்றை கருத்தில் கொண்டு நாம் பொதுவாக உபயோகிப்பது நல்லெண்ணெய். · தேவையான அளவு எண்ணையை தலையில், தலைத்தோல் வரை படும்படி தேய்க்கவும். · தேவையான நேரம் ஊறவிடவும். இப்பழக்கத்தை புதிதாக ஆரம்பிக்கப்போகிறவர்கள் ஐந்து நிமிடம் ஊறுவது போதும். வரும் வாரங்களில் ஊறும் நேரத்தை படிப்படியாக அதிகரிக்கவும். நல்ல பலன் தர அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஊற வேண்டும். ஏனெனில் நமக்கு பழக்கமில்லாத வகையில் சளி, வாந்தி, குளிர்காய்ச்சல், பேதி ஆகிய உடல் நலக்கேடு வர வாய்ப்புண்டு. எனிவே சிறுது சிறிதாக நேரத்தைக் கூட்டுங்கள். · இப்போது உடலிலும் நன்கு தடவவும். · நன்கு சூடான நீரில் நன்கு தேய்த்துக் (massage) குளிக்கவும். சூடான நீர் அவசியம். ஏனெனில் இது தோல் துளைகளை திறந்து, தோல் , மூட்டு ஆகிய பகுதிகளிலிருந்து உள்வெப்பம் வெளியேற வழி செய்யும். ஐந்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் குளிப்பது போதுமானது. · இதற்குப் பின் எண்ணெய் பசையை அகற்ற சிகைக்காய், அரப்பு, ஷாம்பூ ஆகிய பொருள்களை உபயோகிக்கவும். ஒரு சிறு குளியல் போதுமானது. நாம் பொதுவாக இந்த இரண்டு படிகளையும் ஒன்றாகச் செய்கிறோம். இனி, தனித் தனியாகச் செய்யவும். முதல் பாதிக் குளியலில் சிகைக்காய், அரப்பு, ஷாம்பூ போன்ற எவையும் கூடாது. Massage மட்டுமே. · அடுத்த சில மணி நேரம் நன்கு ஓய்வெடுங்கள். பளுவான வேலை, வெளியில் செல்தல், நீச்சல், குளிர்ந்த நீர் அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவும். · திங்கள் கிழமை ஒரு புத்துணர்வுடன் அலுவலகம் / பாடசாலை செல்வீர்கள் என்பது உறுதி. எனவே சனி நீராடு என்பது எண்ணெய் தேய்த்துக் குளி என்பதைக் குறிக்கிறதே தவிர சனிக்கிழமையாவது குளி, சனி(யனே) குளிக்கப் போ, சனிக்கிழமை நீராடு (டாஸ்மாக்) என்றெல்லாம் நமக்கு ஏற்றபடி அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. திருநெல்வேலி பகுதியில் எண்ணை தேய்த்துக் குளித்து விட்டு உளுத்தங்களி உண்பார்கள் என கேள்வி. இது ஏன் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.. Jobs Available தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன · நிருபர்கள் ( Reporters) · முதுநிலை நிருபர்கள் (Senior Reporters) · உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors) · முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors) தகுதிகள்: · பட்டதாரி · 45 வயதிற்கு உட்பட்டவர் · நல்ல தமிழ் நடையில் எழுதுதல் · ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல் · பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 5-4-2012 6.30pm to 8.30pm | Ayyappa Temple Phase III Mayur Vihar, Delhi | Ayyappa Bhajans by HAMSADHWANI Bhajana Group lead by R.K. Vasan | | 9810730983 | 5-4-2012 to 8-4-2012 4.30 PM onwards | Ambedkar Auditorium, Andhara Bhavan, 1, Asoka Rd, New Delhi | Thayagaraja Festival Part-II 5th-4.30 pm Mandolin Sisters-Mandolin 6.30 pm – O.S.Arun-Vocal 6th -4.30 pm –Dr.M.Narmadha – Solo Violin 6.30 pm – S.Sowmya – Vocal 7th – 4.30 pm – Radha Bhaskar – Vocal 6.30 pm – Gayathri Venkataraghavan – Vocal 8th – 4.30 pm – Nisha Rajagopalan – Vocal 6.30 pm – Sudha Raghunathan - Vocal | Shamukhanandha Sangeeta Sabha | For detailed program list talk to Mr. P.Seshadri. 9840984639 S.Krishnaswamy, 9717019444 | 6-4-2012 6.30 PM | Delhi Tamil Sangam | Tamil Isai by Kum. Anaga Manikandan | Delhi Tamil Sangam | | 7/4/2012 (from 6 am) T0 8/4/2012 (till 2 pm) | 'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI | Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | +91-9891064432, +91-9871154466. | 8.4.2012 Sunday Aarathi: 10 AM | Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi | Mahanivedanam (ANNAKOODA UTSAVAM) | Sri Venkateswara Mandhir Society, Delhi | 011-2610 9096 | 9-4-2012 Monday 6.30 PM | Kamaani Auditorium, No 1, Copernicus Marg, New Delhi | Guru Pranam –Utsav of Music & Dance 2012 | Vashali Kala Kendra, Noida | | Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment