Monday, February 1, 2010

Daily news letter 01-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 01,  தை – 19,  ஸபர் – 16

Photos for the program organized by Avvai Tamil Sangam: Vodafone Presents "Give it Your Best"

Click on the following links to see photos of that day : 23-Jan-2010, 24-Jan-2010, 25-Jan-2010, 26-Jan-2010

முக்கிய செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் `லிப்ட்' வசதியுடன் நடை ...

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்க ஏற்பாடு

சித்ரகலா பரிஷத் சார்பில் 7-வது ஆண்டாக நடந்தது பெங்களூரில் ...

மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ...

டெல்லி மருத்துவமனையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மருத்துவ ...

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவதா? நடிகர் ...

முர்ரேவை வீழ்த்தி மகுடம் சூடினார், பெடரர்

குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் ...

மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது

தீவிரவாதிகள் தப்பி ஓட்டம் துப்பாக்கி சண்டை நடந்த போது

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1832

ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.

1884

ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.

1893

தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.

1913

உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.

1918

ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1958

எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.

2003

கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இறப்புகள்

1964

பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்துறையின் முன்னோடி (பி. 1873)

பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாஅணங்களைக் கொண்டவர்.

2003

கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (பி. 1961)

ஓர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார். 1983 ல் சான் பியேர் ஆரிசன் (Jean-Pierre Harrison) என்பவரை மணந்தவர். 1990ல் அமெரிக்கக் குடிமகள் ஆனார். இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

பொச்சாவாமை (vizippuNarvu)

2.1.17

Guarding Against Complacency

(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame.  

534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.

achcha mudaiyArkku araNillai aangkillai

pochchAp pudaiyArkku n-anku

'To cowards is no fort's defence'; e'en so

The self-oblivious men no blessing know.

பொருள்

Meaning

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

இன்றைய பொன்மொழி

சொன்னபின் செய்வதும், செய்தபின் சொல்வதும் சான்றோர் செய்கையல்ல.

இன்றைய சொல்

Today's Word

எல்லிருள் (பெ.)

elliruL

பொருள்

Meaning

1.     விடியலுக்கு முந்திய இருள் (vidiyalukku mun-thiya iruL)

1.     Darkness preceding the dawn

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: