Thursday, July 17, 2008

Daily news letter 17-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 17 2008 ஸர்வதாரி ஆடி-2/ ரஜப் – 14
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
Who wreak their wrath have pleasure for a day;Who bear have praise till earth shall pass away.
Meaning :
தமக்குக் கேடுசெய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
தினம் ஒரு சொல்
அமரகம் - போர்க்களம். FIELD OF BATTLE
பொன்மொழி
கர்வத்தின் நிழல்படாமல் நீங்கள் பணி செய்யவேண்டும்.
பழமொழி – Proverb
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

No comments: