Thursday, August 19, 2010

Daily news letter 19-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 19  வியாழன்,   ஆவணி – 3,  ரமலான் - 8

Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm)

"CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with

Dharamshila Cancer Hospital & Research Centre, Delhi

"கோடை விழா" – Summer Festival

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards)

சிற(ரி)ப்பு நிகழ்ச்சிபுதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள்

சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம்

சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields)

கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்)

Invitation Attached…

முக்கிய செய்திகள் – Top Stories

மாவோயிஸ்டுகளுடன் அமைதி பேச்சு : மந்திரி மம்தா வரவேற்கிறார்

காங்கிரஸ்- பாஜக ரகசிய பேரம்; எதிர்க்கட்சிகள் அமளி

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கோவில் மூன்று இந்தியப் படையினர் பலி

ஸ்ரீ பெரும்புதூர் விமான நிலையம்: யாருக்கும் பாதிப்பில்லாமல் ...

பள்ளி கூரை இடிந்து 18 சிறுவர்கள் பலி

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன்

அமெரிக்காவில் H1B விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு!

சென்செக்ஸ் 208 புள்ளிகள் உயர்ந்தது

முத்தரப்பு கிரிக்கெட் இலங்கையை இன்று சந்திக்கிறது நியூசிலாந்து

ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதம் 0.5% உயர்வு

இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது: அடித்துச் சொல்கிறார் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1895

கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

1919

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.

1934

ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

1945

ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.

1953

பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

1989

போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.

பிறப்புக்கள்

1918

சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (. 1999)

இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

1929

. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (. 2008)

தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.5

வினை செயல்வகை(vinai seyalvakai)

2.2.5

Mode of Action( Ways to Perform)

Ways to perform duties and avocations.

676

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்.

seivinai seyvAn seyalmuRai avvinai

uLLaRivAn uLLam koLal.

Who would succeed must thus begin: first let him ask

The thoughts of them who thoroughly know the task.

பொருள்

Meaning

ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

இன்றைய பொன்மொழி

ஒரே நோக்கைக் கொண்டிருப்பவர்கள் விரைவிலே வெற்றி பெறுவார்கள்.

இன்றைய சொல்

Today's Word

 ஏலரிசி(பெ.)

aelarisi

பொருள்

Meaning

1.     ஏலக்காயின் விதை (aelakkAyin vithai)

1.     Seed of the cardamom fruit

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Wednesday, August 18, 2010

வசுந்தரா என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம்(பதிவுற்றது) நிர்மாணித்த அருள்மிகு சங்கடஹர கணபதி கோயில் குடமுழுக்கு நீராட்டு விழா

செய்தி அறிக்கை

வசுந்தரா என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம்(பதிவுற்றது) நிர்மாணித்த அருள்மிகு
சங்கடஹர கணபதி கோயில் குடமுழுக்கு நீராட்டு விழா

தில்லி மாநகரில் அமைந்திருக்கும் அருள்மிகு சங்கடஹர கணபதி கோயில்
குடமுழுக்கு நீராட்டு விழா ஆகஸ்ட் 29, 2010 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30
க்கு மேல் 8.15 மணிக்குள் மிகக் கோலாகலமாக நிகழவுள்ளது. இப் பெருவிழா
ஆகஸ்ட் 27ம் தேதி காலை கணபதி பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து ஆகஸ்ட் 29ம்
தேதி காலை வரை நான்குகால யாகபூஜையும் மற்றும் பல மந்திரக் க்ரியைகளும்
நடக்கப்பெற்று ஞாயிறு காலை கும்பாபிஷேகத்- துடன் நிறைவுற்று மறு
நாள்முதல் 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகமும் நிகழும்.
தமிழகத்திலிருந்து பல கோயில் கும்பாபிஷேகங்களை இதுவரை வெற்றிகரமாக
நிகழ்த்தியுள்ள 32 வேத விற்பன்னர்களை கோவிலை நிர்மாணித்த வசுந்தரா
என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம் (பதிவுற்றது) இந்நிகழ்ச்சிக்காக வரவழைத்து
குடமுழுக்கு நீராட்டு விழா ஆகம விதிப்படி, வேத சாஸ்த்திர முறைப்படி
நடத்தப்படுகிறது. தென்னிந்திய கலாச்சார முறைப்படி நடக்கும் இவ் விழா
இங்குள்ள பக்தர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும்
ஐயமில்லை என்று எல்லோராலும் கருதப்படுகிறது.

அருள்மிகு சங்கடஹர கணபதியை மூலவராகக்கொண்ட இக்கோயிலில் மூலவரின் எடை 450
கிலோ, 4.5 அடி உயரம் கொண்ட அற்புத மூர்த்தி. அவருக்குப் பரிவார
தெய்வங்களாக சுவாமி ஐயப்பன், சிவன்-பார்வதி, வள்ளி-தெய்வயானையுடன்
குடிகொண்ட சுப்ரமண்ய சுவாமி, ஹயக்ரீவர், ஹனுமான் மற்றும் நவக்ரஹங்கள்,
மேலும் கோஷ்டா தெய்வங்களான தக்ஷிணாமூர்த்தி, ப்ரஹ்ம்மா, விஷ்ணு, துர்க்கை
மற்றும் நிருத்திய கணபதி ஆகியோர் மூலவரைச் சுற்றி சந்நிதியை
அலங்கரிக்கவுள்ளனர்.
தென்னக கலாச்சாரத்தைக்கொண்டு அமையப்பெற்ற இம்மூர்த்திகளுக்கு தனி
விமானமும், கோயில் நுழைவாயிலில் 35 அடி உயரம், 25 அடி அகலமுள்ள மூன்று
அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரமும் அதன் மேல் சுமார் 50 பதுமைகள்
வடிக்கப்பட்டு அலங்காரமாயும், கம்பீரமாகவும் பக்தர்களை வரவேற்கின்றன.

பண்டுருட்டியைச் சேர்ந்த குமரகுருபர ஸ்தபதிகள் இக்கோயிலை
வடிவமைத்துள்ளார். புகழ்பெற்ற சிற்பியான அவர்வசம் தற்சமயம் 500
கோயில்கள் இந்தியாவின் பல மூலைகளிலும், சில வெளிநாடுகளிலும்
அமையப்பெறவுள்ளன. இக்கோயில் பதினெட்டே மாதகாலத்தில் அவரது குழுவினரால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.

"இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெறவுள்ளது என்பது,
எங்கள் சமாஜத்தின் அங்கத்தினர்கள் உழைப்பாலும், நூற்றுக்கணக்கான
பக்தர்களின் ஆதரவாலும் மட்டுமே நிறைவேறியது," என்கிறார் சமாஜத்தின்
தலைவர் திரு ஆர்.கே.வாசன். "இறைவன் அருளாள் எங்களது இம்முயற்சி
ஈடேறியுள்ளது," என்று மேலும் அவர் கூறினார்.

விழாவின் மூன்று நாட்களிலும் பஜனை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகச்
சொற்பொழிவுகளும் நிகழவுள்ளன.

வசுந்தரா என் க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம் இன் நிகழ்ச்சிக்கு தில்லி
முதலமைச்சருக்கும் மற்றும் சில பா.ஜ.க தலைவர்களுக்கும் அழைப்பு
விடுத்துள்ளது. அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Daily news letter 18-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 18  புதன்,   ஆவணி – 2,  ரமலான் - 7

Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm)

"CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with

Dharamshila Cancer Hospital & Research Centre, Delhi

"கோடை விழா" – Summer Festival

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards)

சிற(ரி)ப்பு நிகழ்ச்சிபுதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள்

சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம்

சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields)

கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்)

Invitation Attached…

முக்கிய செய்திகள் – Top Stories

இந்திய எல்லைப் பகுதியில் அதிநவீன ஏவுகணையை நிறுத்தியுள்ளது சீனா

ஈராக் ராணுவ அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு : 40 பேர் பலி

லே பகுதியில் வீடுகள் கட்ட ^125 கோடி நிவாரண நிதி

விமானம் தரையிறங்கியபோது விபத்து: ஒருவர் பலி

அந்தமான், மகராஸ்டிராவில் இன்று நில நடுக்கம்

இலங்கைக்கு 40 பேர் கொண்ட அமெரிக்க ராணுவக் குழு வருகை

சேவக்கிற்கு எதிராக சங்ககரா சதி : ரந்திவ் செயலுக்கு இலங்கை ...

ஆடுகளம் சரியில்லை: வெளியேறினார் தோனி

திருப்பதி கோவில் டிக்கெட் விற்பனையில் ரூ.50கோடிக்கு மெகா ஊழல்

விவசாயிகளின் போராட்டம் எதிரொலி: உ.பி., அரசு கீழிறங்கி நேசக்கரம்

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: கேரளத்தில் மதானி கைது

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒத்தி போடக்கூடாது: கருணாநிதி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1201

லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.

1868

பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1877

செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

1950

பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.

1958

விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

இறப்புகள்

1945

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், (பி. 1897)

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.5

வினை செயல்வகை(vinai seyalvakai)

2.2.5

Mode of Action( Ways to Perform)

Ways to perform duties and avocations.

676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

Mudivum idaiyURum mutRRiyAngu eythum

Padupayanum pArththuch seyal.

Accomplishment, the hindrances, large profits won

By effort: these compare,- then let the work be done.

பொருள்

Meaning

ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).

இன்றைய பொன்மொழி

உன் அண்டை வீட்டுக்காரனை நேசிப்பது போல் உன் விரோதியையும் நேசி.

இன்றைய சொல்

Today's Word

 ஏலம்(பெ.)

aelam

பொருள்

Meaning

1.     கூடியிருப்போருள் உயர்ந்தபட்ச விலைதருவோருக்குப் பொருளை விற்கும் விற்வனை.

2.     சிறுவிதைகளை கொண்ட ஒரு வாசனைப் பண்டம், ஏலக்காய் (aelakkAi)

3.     மயிர்ச்சாந்து (mayirchchAn-thu)

1.     auction

2.     Cardamom

3.     Unguent for perfuming the hair of women

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India