31-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி -௧௮(18),வியாழன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend நல்ல நடத்தையை இழந்தால் மீண்டும் அதைப் பெறுவது கடினம். குறளும் பொருளும் - 1182 காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல் அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. Translation: 'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes. பொருள்: அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது. Explanation: Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person. உங்களுக்குத் தெரியுமா? வடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும். செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம் சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம். எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி. தில்லியை நன்றாகப் பாருங்கள்... செல்லும் இடம் : Delhi Gate – Red fort - stop no 1 & 2 on HOHO Bus) டெல்லி கேட், ஷாஜஹான்பாத் நகரின் தெற்குப்புற வாசல். இங்கு புது தில்லியும், தில்லியும் இணையும் இடம்.ரெட் போர்ட் பற்றி சொல்லத் தேவையில்லை. அன்றைய முகலாயப் பேரரசின் தலைமையகம், இன்றும் நமது பிரதமர், ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றும் இடம். செல்லாத சுற்றுப்புறம் : Kooni Darwaza(The Gate of Blood) – இரத்த வாசல் .. இங்குதான் முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர் ஷா சஃபர் அவர்களின் இரு புதல்வர்களும், பேரனும் 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர கிளர்ச்சியின் போது வில்லியம் ஹோட்சனால் நிர்வாணப்படுத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் 1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் இங்கு பலர் இரந்தம் சிந்தினர். இவ்விடம் டெல்லி கேட்டிற்கு அருகில் உள்ளது. Chandhini Chowk சாந்தினி சௌக் ( நிலவொளி சதுக்கம்): ஷாஜஹான்,மும்தாஜ் அவர்களின் புதல்வி ஜெஹனாரா அவர்களால் வடிவமைக்கப்பட்ட இவ்விடம் இன்றைய புராண தில்லியில் உள்ள ஒரு மிகப் பெரிய வணிகத் தலம். அந்தக் காலத்தில் "டெல்லி ரேடியோ" மிகப் பிரபலமானது. டெல்லி ரேடியோவில், சிலோன் வானொலி கேட்பது ஒரு மிகப் பெரிய பொழுது போக்காய் இருந்த காலம் அது. அந்த ரேடியோக்கள் விற்பனை செய்யப்பட்ட பகுதி. இன்றும் இங்கு எல்லாம் கிடைக்கும். இந்தப் பகுதி துணி வகைகள், அலங்கார விளக்குகள், எலெக்ட்ரிகல் மற்றும் எலேக்ட்ரோனிக் பொருள்கள் வாங்க சிறந்த இடம். சாந்தினி சௌக்கில் பார்க்க வேண்டிய இடங்கள் பல, சிலவற்றை இன்று பார்ப்போம். Shri Digambar Jain Lal Mandir & Bird Hospital : 1656.ல் முதலில் கட்டப்பட்டு பின் பல மாறுதலுக்கு உள்ளான ஜைன மதக் கோவில். இங்குள்ள ஒரு முக்கிய அம்சம் இக் கோவிலிலுள்ள பறவைகளின் மருத்துவமனை. நாளொன்றுக்கு 60 பறவைகள் வரை இங்கு அட்மிட் செய்யப்படுகிறது. குருவி, புறா, மைனா, கிளி என எந்தப் பறவையாக இருந்தாலும், எந்த விதத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் இங்கே அட்மிட் செய்யலாம். 1956 ல் துவங்கப்பட்ட இந்த மூன்று மாடி மருத்துவமனையில் சைவப் பறவைகளுக்கு என ஒரு மாடியும், அசைவம் உண்ணும் பறவைகளுக்கு என தனி மாடியும் உண்டு. முதலில் ICU வில் அனுமதிக்கப்படும் பறவைகள் பரிசோதனைக்குப் பின் உடல் நல நிலைக்கேற்ப பின்னர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுகிறது. வாரம் ஒருமுறை சனிக்கிழமையன்று, மேல்மாடியின் ஒரு பகுதி திறக்கப்பட்டு நலமான பறவைகள் தன் வழி செல்ல அனுமதிக்கப் படுகின்றன. இவ்விடத்தின் மேல்க் கூரையில் பல பறவைகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இவை நலமான பறவைகளா அல்லது அனுமதிக்கப் பட்டிருக்கும் தன் உறவினரை பார்க்க வந்த பறவைகளா என வியக்கலாம். இது முழுக்க முழுக்க பறவைகளுக்கேன்றே பணிபுரியும் ஒரு தனித்துவம் மிக்க மருத்துவமனை. ரெட் போர்ட்டிற்கு நேர் எதிராக, சாந்தினி சௌக் ஆரம்பிக்கும் இடத்தில் உள்ளது இவ்விடம். சாந்தினி சௌக்கில் ஏரியாவில் மட்டும் இரண்டு மூன்று நாட்களுக்கு பார்க்க வேண்டிய அளவு இடங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம். உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும். நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 2/6/2012 6PM | Delhi Tamil Sangam | Dinamani Delhi edition First Anniversary. Celebrations Special program: Musical concert by Dr.Seerkazhi Siva Chidambaram | Dinamani | | 4/6/2012 5.00 AM to 5.45 AM | Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075 | Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | Shri S Ramaswamy, (Ph: 99680 93927), Sh S Ganesan : 9810138189 Sh N Loganathan : 9868809429 Sh R Krishna Kumar : 9868826051 | 30-6-2012 6-30 PM | Delhi Tamil Sangam | Tamizhisai by Smt. Savita Sriram – Vocal Sri.V.S.K. Chakrapani – Violin Sri. Kumbakonam N. Padmanaban – Mridangam Sri. Mannai N. Kannan - Ghatam | | N. Kannan +919810791076 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment