16-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி – ௩ (3 ),புதன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend பிறர் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்; உனக்கு சரி எனத் தெரிவதைச் செய். குறளும் பொருளும் - 1173 காமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல் தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். Translation: The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile!. பொருள்: அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது. Explanation: They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?. நல்லா இருப்பே.. அன்றைய பழக்கமும் அறிவியல்தான். நிலா நிலா ஓடி வா... நாங்கள்தான் இந்தப் பாட்டை, அம்மாவின் இடுப்பில் உக்காந்து நிலாவில் வடை சுடும் பாட்டியைப் பார்த்தபடியே அம்மா பாடுவதை கேட்டபடியே ரசம் சோறு உண்ட கடைசி தலைமுறை என பலர் முகநூலிலும், இதையே தம் குழந்தைகளுக்கு கதையாகவும் சொல்லும் தலைமுறையை சேர்ந்தவர்கள் கேட்டு ரசித்த பாடல். இன்று ஒருவர் முகநூலில் நிலாவில் ஒரு பெண்மணியின் சடலமும், அதன் அருகில் ஒரு வடையும் இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது அது நமது வடை சுட்ட பாட்டி என தெரியவந்துள்ளது என கிண்டல் செய்து எழுதியதை படித்தபோது இறந்தது வடை சுட்ட பாட்டி இல்லை, இறந்தது/இழந்தது அம்மாவின் மடியில் அமர்ந்து இயற்கையை தன் போக்கில் ரசித்து, குழந்தை, தாய், தாய், நிலா என மூவர் மட்டுமே பங்கேற்கும் ஒரு அன்பான நாடகத்தை என்றறிந்து மனம் வேதனைப் படுகிறது. அன்று வட்ட நிலாவைப் பார்த்து உணவு உண்ட குழந்தைகள் இன்று செவ்வகப் பெட்டியைப் பார்த்தபடியே தன் போலி உலகைக் காண துவங்குகின்றனர். குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் கண்டிப்பா வந்துடுங்கோ... பாப்பாவுக்கு கோயிலுக்கு போய் சோறூட்ட போறமுங்க நீங்களும் கண்டிசனா வரோனுமுங்க... இது குழந்தைப் பருவச் சடங்கு. ஓராண்டு முடிந்ததும் குழந்தைக்கு கோவிலிலோ, வீட்டிலோ பூஜைக்குப் பின் வெள்ளிப் பாத்திரத்தில் பாலும் சோறும் கலந்து ஊட்டி முதன் முதலில் குழந்தைக்கு திடப்பொருள் உண்ணக் கொடுக்கும் ஒரு சடங்கு. பொதுவாக இது ஒரு வயது நிறைவை ஒட்டி வருவதால் இது பெரு பெரிய அளவில் கொண்டாடப்படுவது. இன்றும் இது உண்டு.ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்த சடங்கு அறிவையும், அறிவியலையும் இணைத்து ஒரு காரணத்துடன் இருந்தது. இன்று ஒரு கடமையாக இருக்கிறது. ஏன் ஒரு வயதில் இந்த சோறூட்டும் விழா? இதற்கு முன் நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள். முதல் ஆறு மாதங்கள். மண்ணிற்கு வந்த குழந்தைக்கு கார்போஹைட்ரேட், ப்ரோடீன்,கொழுப்பு ஆகியவற்றை செரிக்கும் சக்தியைத் தரும் செரிமான நோதிப்பொருள் (digestivr enzymes) குறைவு. தாய்ப்பாலில் உள்ள enzymes மற்றும் உமிழ் நீர் இதை ஈடுசெய்கிறது. மேலும் குடல்பாதையை (gatro intestinal tract) நுண்ணுயிரிகளிடமிருந்து காப்பாற்றும் mucusம் குறைவு. எனவே. குழந்தைக்கு நோய்கிருமி தாக்கம் விரைவில் மற்ற உணவுகளிலிருந்து பரவ வாய்ப்புண்டு. குழத்தை இக்கிருமிகளிடமிருந்து போராடும் சக்தியை தானாகவே பெற 6 மாதங்கள் ஆகும். அதுவரை, இப் போராடும் சக்தியை தாய்ப்பால் தருகிறது. எனவே குறைந்த பட்சம் 6 மாதங்கள் குழத்தை வெளி உணவை உண்ண தயாரவதில்லை. மேலும் 6-7 மாதங்களில் மாவுப் பொருளை செரிக்கும் சக்தி வந்தாலும், கொழுப்பை நல்ல முறையில் செரிக்கும் சக்தி குழந்தைக்கு கிடைக்க 9 மாதங்கள் வரை ஆகிறது. எனவே குழந்தை 6 மாதங்களில் திட உணவை உண்ணத் தயார் எனினும், அதன் உடல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 9 மாதங்கள் வரை பொறுத்திருப்பது நல்லது. 6 வது மாதத்திலிருந்து திரவ உணவுகளை துவக்கி கொஞ்சம் கொஞ்சமாக திட உணவிற்கு மாறுவது நல்லது. சில மருத்துவர்கள் குடும்ப உறுப்பினர்களில் உணவு ஒவ்வாமையை கணக்கில் கொண்டு ஒரு வயது வரை திட உணவை தள்ளிப் போடுவதுண்டு. அந்தக் காலத்தில் மருத்துவ சக்திகள் அதிகம் இல்லாத நிலையில் அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு பொதுவாகவே ஒருவயது வரை தள்ளிப் போட்டார்களோ என்று நம்பத் தோன்றுகிறது. திடப் பொருள் உணவை தள்ளிப்போட மேலும் சில காரணங்கள்: · Delaying solids gives baby greater protection from illness. · Delaying solids gives baby's digestive system time to mature. · Delaying solids decreases the risk of food allergies. · Delaying solids helps to protect baby from iron-deficiency anemia. · Delaying solids helps to protect baby from future obesity. · Delaying solids helps mom to maintain her milk supply. · Delaying solids makes starting solids easier. எனவே, அன்று முதலாம் ஆண்டு பிறந்த தினத்தில் குழதைக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு வழக்கமாக இருந்தது. காரணம் குழந்தைக்கு அதிக தாய்ப்பால் கிடைக்கவும், உணவை உண்ணத் தயாராகும் முன்னர், உணவை நன்கு செரிமானம் செய்து அதன் சக்திகளை உடலுக்கு பெற்றுத் தரும் வலு உடலுக்கு ஏற்பட தேவையான நேரத்தையும் அது தந்தது. குழந்தை திட உணவை தாயின் நேரமின்மையால் உண்ணாமல், உடலின் தேவைக்காக உண்டது. இன்று பல விளம்பரங்கள், அறிவுரைகள் காரணமாக குழந்தை, தாய்ப்பாலின் மாற்று உணவிற்கு வெகு விரைவில் பழக்கப் படுத்தப்படுகிறது. இவை அதிக கெடுதலில்லை எனினும் ஏன் இந்த அவசரம்? ஒரு வயதில் உண்ணவேண்டிய உணவை 6 மாதத்திலே உண்டு 5 வயதில் செல்லவேண்டிய பள்ளிக்கு 3 வருடத்திலே சென்று, என அதிவேகமாக குழந்தை முன்னேறி அன்று 100 வயதுவரை வாழ்ந்த வாழ்க்கையை இன்று 60 களிலேயே வாழ்ந்து முடிக்கின்றனர். எதிலும் அவசரம்... அன்று அறிவியலை தெரியாமல், குழந்தை வளர்ச்சிபெற்று உணவை உண்ணவேண்டும். உணவில் உள்ள சக்திகளை இந்த உடல் தானே பிரித்து கொள்ளும் நிலை வரும் வரை தாய்ப்பாலே நல்லது என்ற அறிவு இயலை புகுத்த, முதல் ஆண்டு ஆயுஷ் ஹோமம், கோவிலுக்கு சென்று உணவூட்டுதல் என்ற முறையை உண்டாக்கினார்கள். அடுத்த தலைமுறைக்கு இதை சொல்லவேண்டியது நாம்தானே இதைச் செய், இப்படிச் செய், செய்ய வேண்டிய நேரத்தில் செய் இதன் பலன் நீ நல்ல இருப்பே என்று.. நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 17/5/2012 2012 at 6.30 pm | Sri Shakthi Vinayagar Temple, Kendriya vihar, Sector51,Noida | Guru Peyarchi Homam | Kendriya Aasthiga Samajam, Kendriya Vihar, Sector – 51, Noida | Phone- 2481293/2480529/2481963/2441377 | 17/5/2012 8.00 To 9.30 AM | Adi Shankara Mutt, Plot No 52, Sector 42 | Guru Peyarchi Maha Yagnam | Sri Uttara Indra Prastha Vaidiga Samajam(Regd.) | Somaskanda Sastri 98104 85448 | 4/6/2012 5.00 AM to 5.45 AM | Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075 | Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | Shri S Ramaswamy, (Ph: 99680 93927), Sh S Ganesan : 9810138189 Sh N Loganathan : 9868809429 Sh R Krishna Kumar : 9868826051 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment