Tuesday, May 1, 2012

01-05-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

01-05-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௧௯ (19 ),செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

 - Friend on Facebook |  Follow on Twitter |  Forward to a Friend

 

உள்ளத்தில் அன்பு மட்டும் இருந்தால் போதாது; அது செயலிலும் வெளிப்பட வேண்டும்.         

குறளும் பொருளும்1163

காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து.

Translation:

My soul, like porter's pole, within my wearied frame,

Sustains a two-fold burthen poised, of love and shame.

பொருள்:

துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

Explanation:

 (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them

 

உங்களுக்குத் தெரியுமா?

இரட்டை விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால், வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.

 

"நல்லா இருப்பே"  - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

புளியம் பழ நட்பு ...

கிராமத்தில் இருந்தபொழுது, லாலிபாப் எனும் குச்சி முட்டாய் கூட சிலருக்கு கனவுதான். அன்றைய தினத்தில் நாமே செய்த லாலிபாப் இலவசமாய் கிடைக்கும் புளியம் பழம், உப்பு, கொஞ்சம்  மிளகாய் இடித்து உருண்டையாக்கி தென்னம் குச்சி சொருகி உருவாக்கியது. அதைவிட போட்டி போட்டு சண்டை போட்டு பறித்தது, பாதி பழுத்து காயாகவும் , கனியாகவும் இருக்கும் புளியோம் பழம். இள மஞ்சள் நிறத்தில் ஆப்பிள் போல சதையுடனும், கொஞ்சம் இனிப்புடனும்... ம்..ம்.. சொல்லும் போதே.... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே நண்பனே... ஏனென்றால் இந்த புளியம் பழம் பறித்து சாப்பிட்ட பருவம் நண்பர்களோடு மட்டுந்தான்...  

 

இன்று கொஞ்சம் மாறியுள்ளது.. திருவல்லிக்கேணி கோவிலுக்கு சென்றேன் என்றால், பலர் முதலில் கேட்பது பார்த்தசாரதி கோவில் புளியோதரை சாப்டீங்களா? என்பது. புளி அதே ரெசிபி மட்டும் மாறிவிட்டது வயசுக்கேற்றபடி...

 

இந்த புளியில் என்ன உள்ளது, இதை ஏன் உணவில் சேர்க்க வேண்டும். புளிப்பு தான் வேண்டுமென்றால் இன்று பல மாற்றுக்கள் உள்ளனவே..  புளி என்று டைப் செய்யும் போது ட்ரான்ஸ்லிட்டரேசன் –ல் புலி என்று வருகிறது.. எனவே ஒரு சின்ன தகவல். வால்பாறை பக்கத்தில் பசு மாடு ஒன்று இரண்டு நாட்களுக்கு முன் கிராமத்தில் நுழைந்த புலியை தனியாக  நின்று எதிர் கொண்டதாம். புலியை போட்ட போட்டில் அது நடக்கமுடியாமல் அதே கொட்டிலில் தவித்தாகவும் பின்னர் வன அதிகாரிகள் அதை காப்பாத்திச் சென்றதாகவும் செய்தி.  புலியை முறத்தால் அடித்து துரத்திய  தமிழச்சி பிறந்த தமிழ் மண் அல்லவா?  அந்த மண்ணில் விளைந்த பசும புல்லை தின்று வளர்ந்த மாட்டிற்கும் பலமிருக்காதா என்ன?   

 

புளியைப் பற்றிப் பார்ப்போம். இதிலுள்ள முக்கிய சத்து carotenes, vitamin C, flavanoids and the B-vitamins. இவையும் நம் வாழை இலை போல கான்சர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. இதன் சில  குணங்கள்..

•Tamarind is a good source of antioxidants that fight against cancer. Tamarind contains carotenes, vitamin C, flavanoids and the B-vitamins

• Tamarind protects against vitamin C deficiency

• Tamarind reduces fevers and provides protection against colds

• Tamarind helps the body digest food

 • Tamarind is used to treat bile disorders

• •Tamarind can be used as a mild laxative. The pulp which comes from the pods of the tamarind tree is a gentle laxative that improves general sluggishness of the bowels. One to two tablespoons of the pulp in evening can improve bowel movements.

•Tamarind is very useful to treat bilious disorders. Being acidic it excites the bile and other juices in the body.

•Tamarind leaves are used in herbal tea for reducing malaria fever.

•Tamarind lowers cholesterol level in the body and helps in promoting healthy

• Tamarind promotes a healthy heart

• Tamarind can be gargled to ease soar throat

• Tamarind applied to the skin to heal inflammation

 

இவ்வளவு நன்மைகளை புளிய மரம் தந்த போதிலும், இதன் உதிரும் இலைகளில் உள்ள ஒரு வித அரிப்பு தன்மையால், இதன் கீழ் பொதுவாக எந்த செடிகளும் நீண்ட நாள் வளர்வதில்லை.  இதனால் தான் புளியமரத்திற்கு கீழே படுத்துத்  தூங்கக் கூடாது என ஓர் சொல்லும் உண்டு. மேலும் இதன் வேர்கள் பலமானது. இவை வீட்டின் அடித்தளத்திற்கு ஊறு விளைவிக்கும்.  இதன் காரணமாக பொதுவாக வீடுகளில் வளர்க்கப் படுவதில்லை.  

 

இன்று புலி,புளி இரண்டுமே குறைந்து வருகின்றன. அசோகர் அன்று நட்ட மரங்கள் சாலை  விரிவாக்கத்திற்காக வெட்டப் படுகின்றன. மாற்று மரங்கள் நடும்போது புளியமரம் நடப்படுவதில்லை.  அடுத்தமுறை கிராமத்திற்கு செல்லும்போது குழந்தைகளுக்கு புளியம் பழம் பறித்துக் கொடுங்கள். சாப்பிட மறுப்பார்கள் ஏனெனில் அவர்கள் அதே பழத்தை வைத்து உருவாக்கிய பார்பே-க்யு  சாஸ் மட்டுமே சாப்பிட்டு பழகியவர்கள் அல்லவா?  

 

LOOKING FOR A SUITABLE BRIDEGROOM ..

 

80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits,  OBC, employed in Delhi. Contact :09944993186.

 

NEW CARNATIC MUSIC TEACHER IN NOIDA

 

Smt. Vasantha Krishnan, Carnatic vocalist with a teaching experience of over 15 years has recently shifted to NOIDA.  Anyone who wants to learn carnatic music can contact her for further details.  Her contact details are:

Smt. Vasantha Krishnan, 205, Alpine-C, Grand Omaxe, Sector 93, NOIDA Phone No: 9958280308. Email id: vasantha.krishnan81@gmail.com

 

நம்மைச் சுற்றி...

 

 

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

6-5-2012

Sunday

6 PM

Delhi Tamil Sangam

Bhajan Sandhya by Bhajan Samrat Kalaimamani OS Arun in aid of construction of Sri Ram Mandir at Dwarka , New Delhi

Delhi Bhajana Samaj

Col. M.S.Krishnamurthy (retd)

9312281695

 

V. Venataraman

9873495963

 

 

Advisors around us

·         For any type of help like knowledge of insurance,  getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida,  Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

·         For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

·         HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

 

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments: