அவைக்கவிஞர் சத்தியமணி அவர்களின் பொங்கல் வாழ்த்துக் கவிதை.
பொங்கல் வாழ்த்து
தை தை தை ஆடி வந்தாள்
வாழ்த்தை வார்த்தையாக தந்தாள்
கவிதைக் கோலம் போடவே
அமுதை ராகம் சேர்க்கவே (தை)
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
ராதைக் கரும்பு வில்லுடன்
கோதை மஞ்ஞள் கொத்துடன்
சீதைப் பொங்கல் பொங்கவே
கண்ணன் ரசிக்கிறான் (தை)
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
வயல்கள் வளத்தைக் காக்கவே
ஆய்கள் திறத்தைப் போற்றவே
உழவர் வித்தைக் காட்டவே
கதிரைத் தந்தாள் (தை)
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
சூதை சுட்டு வீழ்த்தவே
தீதை வென்று ஆற்றவே
மேதை யென்று வாழவே
ஆசி தந்தாள் (தை)
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
- அன்புடன் சத்தியமணி
No comments:
Post a Comment