Wednesday, July 13, 2011

Daily news letter 13-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  • இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும்.
  • . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள்  பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள  இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து  அளிக்கும் பணியினை  அவ்வை தமிழ்ச் சங்கம்  செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல், வலைத்தள முகவரி,   தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௨௮  (28) , புதன்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

இந்து நம்பிக்கையின் படி, அரைஞாண் அணிந்தோர் ஆடை அணியாவிடிலும் அவர்கள் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சமச்சீர் கல்வி - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு  Bharath News Online 

தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு கர்சாய் சகோதரர் சுட்டுக் கொலை  தினகரன் 

மக்களே ஏற்றிக் கொண்ட சுமைதான் வரி உயர்வு: கருணாநிதி  தினமணி 

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே நாளில் 4 முறை பூகம்பம் தினத் தந்தி

தி.மு.க.வுக்காக 2 இடங்களை காலியாக வைத்துள்ளோம் இதுதான் கடைசி ... தினத் தந்தி

பங்குச் சந்தையில் பெரும் சரிவு... 310 புள்ளிகள் வீழ்ச்சி! தட்ஸ்தமிழ்

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி தினமணி

ஊக்க மருந்து பயன்படுத்தியவர்களுக்கு கடும் தண்டனை : சானியா தினமலர்

வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா  தினமணி

இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

9. கடற்கரையிலே பட்டினத்தார்

சென்னைமாநகரின் அருகேயுள்ள கடற்கரையூர்களிலே சாலத்தொன்மை வாய்ந்தது திருஒற்றியூர். மூவர் தமிழும் பெற்றது அம் மூதூர். பட்டினத்தார் என்று தமிழகம் போற்றும் பெரியார் அப்பதியிலே பல நாள் வாழ்ந்தார். அவரை நன்றாகப் பற்றிக் கொண்டது ஒற்றியூர். தமது உள்ளங் கவர்ந்த ஒற்றியூர்க் கடற்கரையிலே நின்று ஒருநாள் அவர் உயரிய உண்மைகளை உணர்த்த லுற்றார்:-

"
கற்றவர் போற்றும் ஒற்றிமாநகரே! உன்னை நாடி யடையாதார் இந்நாட்டில் உண்டோ? உன் கடலருகே நிற்கும் கரும்பைக் கண்படைத்தவர் காணா திருப்பரோ? அக் கரும்பின் தன்மையை என்னென்று உரைப்பேன்? காண இனியது அக் கரும்பு; கண் மூன்றுடையது அக் கரும்பு; கண்டங்கறுத்தது அக் கரும்பு; தொண்டர்க்கு உகந்தது அக் கரும்பு. கண்டு கொண்டேன் அக்+ கரும்பை! அக் கரும்பே என் கடு வினைக்கு மாமருந்து.

+ " கண்டம் கரியதாய், கண்மூன் றுடையதாய்
அண்டத்தைப் போல அழகியதாய்-தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடல் அருகே நிற்கும் கரும்பு."


"
அலைகடலே! உன் அலையை ஒத்ததே என் நிலையும்! அடுத்தடுத்து வருகின்ற உன் அலைகளை எண்ணமுடியுமோ? அப்படியே என் பிறப்பும் எண்ணத் தொலையாது. இம் மண்ணுலகிற் பிறந்து பிறந்து, நான் மனம் சலித்தேன்; என்னைச் சுமந்து சுமந்து அன்னையர் மெய் சலித்தார். என்னைப் படைத்துப் படைத்து அயனும் கை சலித்தான்; இது வரையில் பிறந்தது போதும். இனிப் பிறவாதிருக்க வேண்டும். அந் நிலையை நாடியே உன்னைத் தஞ்சம் அடைந்தேன்.

"
பழங்கடலே! அப்பர் என்ற அருமைப் பெயர் பெற்ற அண்ணல்-செஞ்சொற் பாமாலை தொடுத்துச் சிவனார் திருவடியில் அணிந்த செம்மல்-முன்னொரு கால் உன் கரையை வந்தடைந்தார்; உள்ளம் உருகிப் பாடினார். ஒப்பற்ற அன்பு வாய்ந்த அப் பெருமானை 'அப்பர்' என்று அழைப்பது எத்துணை அழகு! என் அப்பன் காட்டிய நெறியைக் கடைப் பிடித்தல் என் பிறப்புரிமை யன்றோ? +'மனம் என்னும் தோணியில் சினம் என்னும் சரக்கை ஏற்றி, மதி என்னும் கோலை ஊன்றி, மாக்கடலிற் செல்லுங்கால், மதன் என்னும் பாறை தாக்குமே! ஒற்றியூர் உடைய கோவே! அப்போது உன்னை நினைக்கும் உணர்வினை அருள்வாய்' என்று அவர் அருளிய திருவாக்கே எனக்கு வழிகாட்டு கின்றது. வாழ்க்கை என்னும் கடலில் ஓடும் உயிருக்கு இதனினும் சிறந்த உறுதியுண்டோ? மனத்திலே சீலம் என்னும் சரக்கை ஏற்றாது, சினம் என்னும் சரக்கை ஏற்றுதல் ஈனம் அன்றோ? அச் சரக்கை ஏற்றிச் செல்லும்போது, செருக்கென்னும் பாறை தாக்கி நொறுக்கிவிடும் என்று அப்பர் கூறியது அமுத வாக்கன்றோ? யான், எனது என்னும் இருவகைச் செருக்கும் அற்றவரே பிறவிப் பெருங்கடல் கடந்து பேரின்ப உலகம் பெறுவர் என்று தமிழ்மறை பாடிற் றன்றோ? வாழ்க்கையை உருப்படவொட்டமல் சிதைத்து அழிக்கும் செருக்கை 'மதன் எனும் பாறை' என்று அப்பர் பெருமான் பாடிய அருமையை எவ்வாறு புகழ்ந்து உரைப்பேன்?

+" மனம்எனும் தோணிபற்றி
     
மதிஎனும் கோலை ஊன்றிக்
சினம் எனும் சரக்கைக் ஏற்றிச்
     
செறிகடல் ஓடும்போது
மதனெனும் பாறை தாக்கி
     
மறியும்போது அறிய வொண்ணா
உனைஎனும் உணர்வை நல்காய்
     
ஒற்றியூர் உடைய கோவே"


"
நீர்ப் பெருக்குற்ற நெடுங்கடலே! செல்வச் செருக்கே செருக்கினுள் எல்லாம் தலையாகும். உலக வாழ்க்கை செம்மையாக நடைபெறுவதற்குச் செல்வம் இன்றியமையாததுதான். 'பொருளில்லார்க்கு இவ் வுலகமில்லை' என்பது பொய்யா மொழியே. ஆயினும், செல்வத்தின் பயனறிந்து வாழ்பவர் இவ் வுலகில் ஒரு சிலரேயாவர். அல்லும் பகலும் அரும்பாடுபட்டுத் தேடும் பணத்தை மண்ணிலே புதைத்துவைத்து மாண்டு ஒழிபவர் எத்தனை பேர்? பரிந்து தேடும் பணத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதே பேரின்பம் என எண்ணி வாழும் ஏழை மாந்தர் எத்தனை பேர்? செல்வம் என்பது சொல்லுந் தன்மைத்து என்ற உண்மையை அறியாது அதைக் காட்டி வைத்துக் காக்க முயலும் கயவர் எத்தனை பேர்? செல்வம் பெற்றவர் தம் நிலையைக் குறித்துச் சிறிதும் சிந்திக்கின்றார் இல்லையே! பிறக்கும்பொழுது தங்கத் தலையொடும்,வயிரக் கையொடும், வெள்ளிக் காலொடும் பிறந்தவர் எவரும் இல் லையே! இறக்கும்பொழுது பொன்னையும் பொருளை யும் தம்முடன் கொண்டு செல்வார் எவரும் இல்லையே! இத் தகைய செல்வத்தின் பயன்தான் யாது? உலகியல் அறிந்த பெரியோரெல்லாம் ஒரு தலையாக அதனை உணர்த்தியுள்ளார்க! 'ஈதலே செல்வத் தின் பயன்; அற்றாரை ஆதரித்தலே செல்வம் பெற்றா ரது கடமை.' இதை அறிந்து வாழ்பவர் ஆன்றோர் ஆவர்; கொடுக்க அறியாதவர் குலாமர்; பிறவிப் பயன் அறியாப் பதடிகள்.

† " பிறக்கும் பொழுது கொடுவந்த
     
தில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவ
     
தில்லை; இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த
     
தென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாருக்குஎன்
     
சொல்லுவேன் கச்சி ஏகம்பனே!"
      --
பட்டினத்தார் பாடல்


"
பரந்த பெருங்கடலே! பசித்தோர் முகம் பார்த்து இரங்கும் தன்மை வாய்ந்த செல்வர் இல்லாத நாடு நாடாகுமா? ஏழையர்க்கு ஒன்றும் ஈயாது ஏழடுக்கு மாடம் கட்டி இறுமாந்திருப்பவர் இறைவனது கருத்தறியாத ஈனர் அல்லரோ? மெய்யறிவு பெற்ற மேலோர் எல்லாம் மெய்ப்பொருளாகிய இறைவனை 'ஏழை பங்காளன்' என்று குறித்தனரே யன்றிச் செல்வர் பங்காளன் என்று சிறப்பிக்க வில்லையே! இத் தகைய ஏழையரைப் புறக்கணிப்பது ஆண்டவனைப் புறக்கணிப்பதாகு மன்றோ? அழியுந் தன்மை வாய்ந்த செல்வத்தை அற்றார்க்கும் ஆதுலர்க்கும் கொடுத்து, அழியாத அறமாக மாற்றிக் கொள்வதன்றோ அறிவுடைமை யாகும்?

"
நற்றவர் வாழும் ஒற்றியுரே! என்னையாளும் இறைவன் கருணையால் உறுதிப்பொருள் இன்ன தென்றுணர்ந்தேன். காவிரிப்பும் பட்டினத்தில் கடல் வாணிகத்தால் வந்த பொருளைக் கண்டு களிப்புற்றிருந்த என்னைக் கரையேற்றத் திருவுளங் கொண்டான் ஒற்றியுருடைய இறைவன்; ஒரு சீட்டைக் காட்டி என்னை ஆட்கொண்டான். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்னும் அருமைத் திருமொழியால் என்னுள்ளத்தை உருக்கினான். காதற்ற ஊசியைக் காட்டி என்னைக் கடைத்தேற்றி னானே!

"
ஒற்றியுரே! உன் பெருமையை அவன் அருளால் உணர்ந்தேன். +நீயே சிவலோகம் என்று அறிந்தேன். என் உள்ளம் கவர்ந்த ஒற்றியே! வாழி; என்னைத் தாங்கும் ஒற்றியே! வாழி; உலவாப் பெரும் பெயர் ஒற்றியே! வாழி" என்று வாழ்த்திக்கொண்டு ஆழிக்கரையை விட்டகன்றார் இருவினைக் கட்டறுத்த பட்டினத்தார்.

"வாவிஎல்லாம் தீர்த்தம்; மனம்எல்லாம்வெண்ணீறு;
காவனங்கள் எல்லாம் கணநாதர்-பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்."
      -
பட்டினத்தார் பாடல்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

kaLiththaanaik kAraNam kAttuthal Keezhneerk

kuLiththaanaik theeththureE atru.

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.

பொருள்

Meaning

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

இன்றைய பொன்மொழி

வேதனையைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.     

Member to Members

Commercial shop/office space at Mayur Vihar - Phase III for sale : The  exact address of the same is : Vardhman Mayur Plaza, 1st Floor , Shop no : 16, behind DDA MIG Flats, Mayur Vihar Phase III, Delhi. The size of the flat is 100 sq ft, which is ideal for professionals who wants  to have their own own office, or to Doctors, who want to open their clinic, etc. I would like to sell this flat to own people . Those interested may  contact  dMr.Venkatesh  on numbers : 98111 61370 / 0120 4221 335 . 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enbling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: