Tuesday, September 15, 2009

Daily news letter 15-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam


.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 15, ஆவணி - 30, ரமலான்- 25

இன்று:

1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை தாரக மந்திரமாக சொன்ன மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 100 வது பிறந்த நாள்.

2. தூர்தர்ஷன் "டிவி" சேனல் துவங்கி, 50 ஆண்டுகள் முடிவடைவதை நினைவுப்படுத்தும் வகையிலான பொன் விழா கொண்டாட்டம், இன்று மும்பையில் நடைபெறுகிறது.

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

 

(C. N. Annadurai) (15-09-1909 – 03-02-1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா..

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடையத் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவாரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

 

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவை கேட்க: அவ்வை தமிழ் சங்க இணையத்தளத்தை பார்க்கவும்.

 

அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் குறும்படத்தை youtube இணையத்தளத்தில் காணலாம்: http://www.youtube.com/watch?v=rnz_kzmqCP0

அண்ணா பற்றி பள்ளிப் பாடத்திட்டத்தில் படித்த ஒரு சம்பவம்..

அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு போய்ச்சேர

மிகத் தாமதமாகி விட்டது. ஆனாலும் அண்ணாவின் கன்னித் தமிழ் கேட்க விருப்பபட்டு கலையாமலே

காத்திருந்தது கூட்டம்.அண்ணாத்துரை மேடை ஏறியதுமே ஆரம்பித்தார் அடுக்கு மொழியில்..

மாதமோ சித்திரை

மணியோ பத்தரை

உங்களைத் தழுவுவதோ நித்திரை

மறக்காது எமக்கிடுவீர் முத்திரை..

ஆர்ப்பரிக்கத் தொடங்கிய அலைஓசையை கடலுக்கே விரட்டியதாம் கைத்தட்டல்கள்..

 

கவிஞர் வைரமுத்து அவர்கள், அண்ணா நினைவாடலில் ஓரிடத்தில்..

இளைஞன் : பேரறிஞர் அண்ணா அவர்களே..நான் இப்போது அரசியலில் சேர மிக விருப்பமாக

இருக்கிறேன்..சேரலாமா?

அண்ணா : தம்பி இந்த வயதில் அரசியல் என்பது உனக்கு அத்தைப் பொண்ணு போல..

பார்க்கலாம் - பேசலாம் - சுத்தலாம் - தொட்டுவிடக்கூடாது...

 

Today in History

 

1254 - மார்க்கோ போலோ, இத்தாலிய நாடுகாண் பயணி - பிறப்பு (இ. 1324)

1909 - சி. என். அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவர், தமிழ்நாடு முதலமைச்சர்  - பிறப்பு (இ. 1969)

1916 - முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக தாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.

1950 - மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் காலமாணார், (பி. 1876).

1959 - தூர்தர்ஷன் "டிவி" சேனல் துவங்கப்பட்டது

1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது..

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.3

கல்லாமை

2.1.3

NON-LEARNING

406

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

n-uNmAN n-uzaipulam illAn eziln-alam

maNmAN punaipAvai atRRu.

Who lack the power of subtle, large, and penetrating sense,

Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

பொருள்

Meaning

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

இன்றைய பழமொழி

Today's Proverb

எதிரிக்குச் சகுனத்தடை என்று மூக்கை அறுத்துக் கொள்ளுகிறது போல.

 

ethirikku-s sagunaththadai enRu Mukkai aRuththu-k KoLLukiRathu Pola

To cut your nose to cause a bad omen for your enemy.

 

Said to people who will go to any extent to cause worries to people they hate.

"Envy shoots at others and wounds herself."

"Cutting off one's nose to spite one 's face."

இன்றைய சொல்

Today's Word

எக்காளம் (பெ.)

ekkALam

பொருள்

Meaning

1. (விழாக்களில் இசைக்கும்) பித்தளையால் ஆன நீண்ட ஊதுகருவி.

piththaLaiyal Ana N-eNda Uthukaruvi

1. a kind of cornet.

2. ஏளனம்.

ELanam

2. mocking, derision.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India





--
regards,
Krish
+91-9818092191

No comments: