. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர்- 14, ஆவணி - 29, ரமலான்- 24 | ||||
பாரதியார் பாடல்: வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்.. உங்களின் வசதிக்காக இந்த பாடலின் வீடியோ இன்று அவ்வை தமிழ் சங்க இணையத்தளத்தில் upload செய்யப்பட்டுள்ளது. | ||||
பல்லவி: பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். சரணங்கள்: 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) 2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத) 3. வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம், எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத) 4. முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே, மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே, நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத) 5. சிந்து நதியின்மிசை நிலவினி லே சேர நன்னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத) 6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத) | 7. காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம் ராசபுத் தானத்து வீரர் தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) 8. பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம் கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத) 9. ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம் உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) 10. குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம் கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம் நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத) 11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் வானையளப் போம்கடல் மீனையளப்போம் சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம் சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) 12. காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம் ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம் உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத) 13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம் நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத) | |||
Today in History | ||||
1886 - தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது. 1959 - சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே. 2005 - நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார். | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.3 | கல்லாமை | 2.1.3 | NON-LEARNING | |
406 | உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் uLarennum mAththiraiyar allAl payavAk kaLaranaiyar kallA thavar 'They are': so much is true of men untaught; | |||
பொருள் | Meaning | |||
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு* ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள். | The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
oor ellam vaZhiRathu endru veedu ellam aZuthu purandaalum varuma? | Would it matter if you cry rolling all over your house that the village is prospering? Rather than being jealous of people who are propsering you should try to work and and become wealthy your self. " Malice drinketh its own poison." | |||
இன்றைய சொல் | Today's Word | |||
களர்நிலம் (பெ.) | kaLarNilam | |||
பொருள் | Meaning | |||
1. உவர்நிலம் (uvarNilam) உப்புத்தன்மை கொண்ட நிலம் | 1. saline soil, alkaline earth | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment