Wednesday, July 2, 2008

Daily news letter 2-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

“நம்மை நாமே அறிந்துகொள்ள” “நற்றமிழ் புகழை தெரிந்துகொள்ள”
அவ்வை தமிழ்ச் சங்கம்
(Registered as Avvai Tamil Sangam & Charitable Society)
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
========================================================================================================
July 2 2008 ஸர்வதாரி ஆனி 18 / ஜமாதிஸானி-27

இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றரின் பேதையார் இல்.
No fools, of all that stand from virtue's pale shut out,Like those who longing lurk their neighbour's gate without.

Meaning :
பிறன் மனைவியை அடைவதற்கு துணிந்தவர்கள் அறவழியை விடுவித்து தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.

தினம் ஒரு சொல்
அபவாக்கு- பழிச்சொல், EVILWORD

பொன்மொழி
கடைசிவரை அமைதியாக இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்

பழமொழி – Proverb
அடக்கமே பெண்ணுக்கு அழகு.

Tuesday, July 1, 2008

Daily news letter 1-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 1 2008 ஸர்வதாரி ஆனி 17 / ஜமாதிஸானி-26

இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

Who laws of virtue and possession's rights have known,Indulge no foolish love of her by right another's own.

Meaning :
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

தினம் ஒரு சொல்
அபராணம் - பிற்பகல், AFTERNOON

பொன்மொழி
ஒரேமனிதன் பலவிதமான கலைத்தொழில்களில் வெற்றிபெற முடியாது.

பழமொழி – Proverb
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

Tuesday, June 24, 2008

எளிய தமிழ் இலக்கணம்

தமிழை சரியான படி பயன்படுத்த இலக்கணம் பற்றிய நம் பள்ளிக்கூட படிப்புகளை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.. இங்கே தொல்காப்பியம் நன்னூல் என்று தாங்களும் கற்றுக்கொண்டே மற்றவர்களையும் கூட்டுப்படிப்புக்கு அழைக்கிறார்கள் .(கம்பெயெண்ட் ஸ்டடி) வாருங்கள் இலக்கணம் கற்போம்.

Tuesday, April 22, 2008

கோடை விழா என் பார்வையில்...

ஞாயிறு 20.4.2008 அன்று அவ்வை தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா ஒரு வெற்றிகரமான விழாவாக நடைபெற்றது. எம்..பி. திரு . அம்பேத் ராஜன் அவர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே வந்து பெருமைப்படுத்தினார்.மூவர்ண உடையணிந்து சங்கத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. குழந்தைகளின் இசை வாத்திய கச்சேரி
நிகழ்ச்சியின் மிக அழகான ஆரம்பமாக இருந்தது.

தலைமை தாங்கி பேசிய திரு. அம்பேத்ராஜன் அவர்கள் ""நாம் தமிழ்நாட்டிலிருந்து எத்தனையோ மைல்கள் கடந்து வந்தும் ,நம்
பண்பாட்டை பாதுகாத்து கொண்டுவந்திருக்கிறோம்.. குழந்தைகளின் இன்னிசையில் அந்த பண்பாட்டின் வெளிப்பாட்டை உணர்கிறேன்.
இந்த தமிழ்சங்கத்திற்கு என்னாலான உதவிகளை நான் செய்யத்தயாராக இருக்கிறேன்""
என்று கூறியது அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.

மேடையில் அடுத்த நிகழ்ச்சிக்காக குழந்தைகளை தயார் செய்ய வேண்டி வந்ததால் மற்ற பேச்சாளர்களின் பேச்சை என்னால் கேட்க இயலவில்லை.. ஒலிப்பதிவு காட்சிகளோ அல்லது மற்ற நம் சங்கத்தின் உறுப்பினர்களின் பதிவுகள் மூலமாகவோ தான் நான் அறிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நான் தொகுத்த
அவ்வை யார்? குறுநாடகம். குழந்தைகளின் மழலையில் தூய தமிழ் சொற்கள் கேட்பதற்கு இனிமையே..

.பிறகு திருமதி பாமினி சேகர் அவர்களின் மாணவிகளின் நாட்டிய விருந்து. குழந்தைகளின் சிறுபாத அசைவுகள் கண்களுக்கு இனிமை.

தொடர்ந்து குறத்தி குறி சொல்லும் காட்சியை திருமதி ராஜேஸ்வரி நடராஜன் அவர்களின் மாணவிகள் ஆடியபோது மன்றத்தில் வந்திருந்தோர் தாளமிட்டு ரசித்தனர் .

அடுத்தாற்போல் தமிழ்நாட்டின் முக்கியல கலைவடிவம் கும்மி ..திருமதி இந்துலேகாவின் நடன அமைப்புக்கு ஆடிய குழந்தைகளின் கும்மி ஆட்டமும்
பார்வையாளர்களைத் தாளமிட செய்தது.

அரங்கத்துக்கு வெளியே திரு சம்பத் அவர்களின் உணவுக்கூடம் சுறுசுறுப்பாக விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.. மக்கள் உணவின் ருசியும், மணமும், தங்கள் பசியும், தங்களை செலுத்தியதால் உணவுக்கூடத்தை முற்றுகை இட்டிருந்தனர்.

இதற்கிடையில் மேடை, 'பாட்டுக்கு பாட்டு'
நிகழ்ச்சிக்காக தயாரானது. மக்கள் இதற்கென்ற காத்திருந்தார்ப்போல
ஆர்வமாக இருந்தனர். ஆரம்பக்கட்டதிலேயே பழய பாடல்களாக பாடப்பட .. மக்கள் கல்லூரிக்காலம் போல ஓ ஓ என்று
குரல் எடுத்தும், கைதட்டியும் ஆரவாரித்தனர்.

அரங்கித்தின் பார்வையாளர்களிடமும் சில சமயம் கேள்விகள் கேட்கப்பட உற்சாகத்தில் பதில் அளித்தும் பாடியே காட்டியும் மகிழ்ந்தனர் பார்வையாளர்கள்..

கடைசி நிகழ்வான பட்டிமன்றம் நடுவர் திரு சேதுராமலிங்கம் அவர்களின் உரையோடு தொடங்கியது. பேச்சாளர்கள் அனைவருமே நல்ல பட்டிமன்ற திறமையோடு தங்கள் வாதங்களை வைத்தார்கள்.

அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் உற்சாகத்தைத் தந்தார்கள்.
திரு . அம்பேத்ராஜன் போன்றவர்களின் உதவியால் .. சங்கம் தன் சொந்த கட்டிடமும் நூலகமும் என்று வளரவேண்டும் .

Friday, April 18, 2008

தமிழ், தமிழ் சில தளங்கள் அறிமுகம்

கணினி வாங்கிய புதிதில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி படித்து என் தங்கத்துக்கு சொல்லித்தருவது என்வேலையாக இருந்தது. இப்போதும் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களுக்கு அந்த உரல்(url) களை தந்து நேரம் கிடைக்கும் போது பார்க்கச் சொல்வேன்.அவற்றில் சில இங்கே,
http://www.tamilvu.org/ -- -- இதில் தமிழ்நாட்டினை விட்டுவெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.
மேலும் சில தமிழ்வகுப்புகள்...
http://www.mazalais.com/tamil.html

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
http://www.southasia.upenn.edu/tamil/index.html


----------------------------------------------------------------
சில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.

--------------------------
உங்களுக்கு எந்த ஒரு தமிழ் வார்த்தையின் சரியான பொருள் தெரியவேண்டுமா இந்த டிஜிட்டல் டிக்ஸனரியில் தட்டுங்கள்.. வந்துவிழும் ..
நீங்கள் யுனிக்கோடு ஃபாண்ட் வைத்திருந்தால் தமிழிலேயே கிடைக்கும்... அதற்கு டிஸ்ப்ளே ஆப்சனில் i have a unicode font installed இதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
விக்ஷனரியையும் இதில் சேர்க்கிறேன் அங்கிருந்தும் நீங்கள் தமிழ் சொற்களுக்கு பொருள் அறிந்து கொள்ளலாம்..

Sunday, January 27, 2008

Photos taken on 27th jan 2008 Meeting



for downloading visit: http://picasaweb.google.com/avvaitamilsangam/27thJan2008Meeting

அவ்வை தமிழ் சங்கம் - முதல் நிகழ்ச்சிபற்றிய சுருக்கம். / Short info on the first Avvai Tamil sangam meeting. ( 27-1-2008)

நண்பர்களே, அவ்வை தமிழ்ச்சங்கத்தின் மறு துவக்க விழாவினை மிக சிறப்பாக நடத்திக்கொடுத்த அனைவர்க்கும் எங்கள் நன்றி. விழாவை திரு.ஸ்ரீகாந்த் அவர்கள் தொகுத்து வழங்கினார். திருமதி. அம்பிகா ஸ்ரீகாந்த் அவர்கள் இறைவணக்கம் பாடி துவக்கி வைக்க, திரு. சங்கரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். பின்னர் வந்திருந்த அனைவரும் தங்களைப்பற்றி அறிமுகபடுத்திகொண்டு சங்கத்தை வளர்க்க செய்யவேண்டிய விஷயங்களை பற்றி விவாதித்தனர். சிறப்புரையாக திரு.சேதுராமலிங்கம் ஐயா மிக அருமையான ஒரு சொற்பொழிவு நடத்தினார்கள். திரு சுரேஷ் அவர்களின் நன்றிவுரையுடன் நிகழ்ச்சி இனிவே நிறைவுற்றது. சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 10 ம் தேதி மாலை 4-6 மணிக்கு செக்டர் 19 ல் உள்ள சநாதன் மந்திர் பார்க்ல் நடைபெறும். விவரங்கள் பின்னர்.....
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவர்க்கும் நன்றிகள். வணக்கத்துடன்,ஒருங்கனைப்பு குழு அவ்வை தமிழ் சங்கம் நொய்டா
குறிப்பு: பிழைகளை மன்னிக்கவும்..

All,
The Avvai Tamil sangam's first meeting went on very well. Mr.Shrikhanth ( Sec-51) complied the program. The prayer song was sung by Mrs.Ambhika Shrikant which was followed by welcome address by Mr.Shankaran. All the members present in the meeting room introduced themselves and also gave suggestions to improve the sangam. Our Special Guest Mr.Sethuramalingam from Delhi made a fantastic speech which also included advices on how to plan the next step and how to create an individual identity for the sangam. Mr.Suresh( Sec-34) thanked all the members present and asked them to provide continuous support to improve the sangam's activities. It is decided to have the next meeting at the park adjacent to sanathan mandhir Sec-19 between 4-6- PM. No agenda is decided yet.

We thank all those helped physically and financially to make the event a great success. Our special thanks to Mr.Shivakumar & Mr.Venkatraman for helping us to get the community center, Mr.Guruswamy ( who took the photographs of the event), Mr.Kamaraj( Kamaraj Store - Provided snacks for event),Mr.Raju ( Estate Manager- RWA Sec-50), Mr.Sivaprakasam, Mr.Sakthivel, Mr.Jayakumar & Mr. Durairaj
regards,
organising committee.
Avvai Tamil Sangam, NOIDA