Thursday, March 19, 2009

Daily news letter 19-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.


Daily news letter 19-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஆக்கப் பணிக் குழு உறுப்பினர் திரு.கண்ணன், (செக்டர் 19, நொய்டா) அவர்கள் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவ்வை தமிழ்ச் சங்கத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பல. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற "தமிழ் கலை விழா" நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிக்கல் இட்டவர் திரு.கண்ணன் அவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறோம். இன்றைய குறள் அவர் நினைவாக...

மார்ச் - 19, பங்குனி - 6 ரப்யூலவல் -21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue (இல்லறவியல் - Domestic Virtue)
1.2.7 செய்ந்நன்றி அறிதல் Gratitude

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.
Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea.
Meaning :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரியது.
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

No comments: