நோய்டாவில் அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் ஜனவரி 24-26 வரை "தமிழ் கலை விழா"
அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் ஜனவரி 24-26 வரை "தமிழ் கலை விழா" நடைபெற்றது. இயல் இசை நாடக மன்றத்தை சேர்ந்த கிராமிய கலை குழுவினர் சென்னையிலிருந்து வந்திருந்து காளியாட்டம், காவடி ஆட்டம், பொய்கால் குதிரை, கரகம், புலி ஆட்டம், சிலம்பம், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலைகளை இங்கு வாழ் மக்களுக்கு வழங்கினர். இந்தியாவின் வட மாநில மக்களுக்கு தமிழகத்தின் கலை பெருமை உணர்த்த "கிரேட் இந்தியா பிளேஸ்" என்ற இந்தியாவின் மிகப்பெரிய வியபாரக்கூடத்தில் (MALL) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன்,தமிழகம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் நடனங்களையும் பல்வேறு நடனப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வழங்கினர்.
இத்துடன் தமிழகத்தின் பெருமையை விளக்கும் பொங்கல் திருவிழா, நவராத்திரி விழா, மாவிலை மற்றும் தென்னை தோரணங்களுடன் வியாபரகூடம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. வியாபாரக்கூடத்திற்கு மக்கள் வருகையின் எண்ணிக்கை 25 ம் தேதி 1.8 லட்சமாகவும், 26 ம் தேதி 1.72 லட்சமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் திரு.R,வேலு, திருமதி அன்புமணி ராம்தாஸ், டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகள் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment