Friday, September 18, 2009

Daily news letter 18-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 18, புரட்டாசி - 2, ரமலான்- 28

Today in History

1851 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது. இறப்புகள்.

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.3

கல்லாமை

2.1.3

NON-LEARNING

410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

Vilangkodu makkaL anaiyar ilangkun-Ul

katRRArOdu eenai yavar.

Learning's irradiating grace who gain,

Others excel, as men the bestial train.

பொருள்

Meaning

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

இன்றைய பழமொழி

Today's Proverb

தொன்மை நாடி , நன்மை விடாதே.

Thonmai n-Adi n-nmai vidAthE

Don't forsake the good in search for the ancient.

It is as if the proverb is directed to me. Usually people brood over their past and forget their present.

" The olden age was never the present age."

இன்றைய சொல்

Today's Word

எகினன் (பெ.)

ekinan

பொருள்

Meaning

1. பிரமன் (piraman)

1. Brahma( who rides on a swan).

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, September 17, 2009

Daily news letter 17-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 17, புரட்டாசி - 1, ரமலான்- 27

இன்று - ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973) பிறந்த நாள்.

ஈரோடு வெங்கட்ட ராமசாமி:

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈரோடு வெங்கட்ட ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.

 இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்மற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னாள் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.

பெரியாரின் 19 வது வயதில், 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுவதுமாக ஆட்ச்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள்.

1907ல் பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.

சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன.

·         சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர். ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.

·         கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது. அளவில்லா குழந்தைகள் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுபாட்டை 1920 களிலேயே இதை வலியுறுத்தியது.

·         கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களை கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தை திருமணத்தையும் தடை செய்தது.

·         இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையை கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.

பெரியாரின் கடைசி கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று கலந்து கொண்டார்.

Today in History

1997 - பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 - இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

1858 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

1956 - ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.

இறப்புகள்:

1953 - திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)

1979 - எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.3

கல்லாமை

2.1.3

NON-LEARNING

409

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

maeRpiRan-thAr aayinum kallAthAr keezppiRan-thum

kaRRAr anaiththuilar pAdu

Lower are men unlearned, though noble be their race,

Than low-born men adorned with learning's grace.

பொருள்

Meaning

படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

இன்றைய பழமொழி

Today's Proverb

அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிகிறவன் ஒன்று நினைதுகக் குடிக்கிறான் .

araikkiRavan onRu n-inaiththu araikkiRAn,

kudikkiRavan onRu n-inaiththuk kudikkiRaan.

The thought of the one who grinds all the ingredients is different from the one who drinks it.

The one who produces has different thoughts from the one who consumes. Consumer wants good product where as the producer wants profit

இன்றைய சொல்

Today's Word

எகின் (பெ.)

ekin

பொருள்

Meaning

1.     அன்னம்

(annam)

1. swan.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Wednesday, September 16, 2009

Daily news letter 16-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 16, ஆவணி - 31, ரமலான்- 26

இன்று: இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்த நாள்.

தமிழ் தாய் அவ்வையின் "விநாயகர் அகவல்",  இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் உங்களுக்காக அவ்வை தமிழ் சங்க இணையத்தளத்தில் upload செய்யப்பட்டுள்ளது.

Alternate link: http://www.youtube.com/watch?v=-WlNhbEgjNc

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் அவர்களை 1940 ஆண்டு சுப்புலட்சுமி அவர்கள் மணந்தார்.

இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன.

1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடாத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி, மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.

எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் வாங்கிய விருதுகள் :

•  பத்ம பூசண் – 1954

• சங்கீத கலாநிதி - 1968

• ராமன் மகசேசே விருது - 1974

• பத்ம விபூசண் - 1975

• காளிதாச சன்மான் - 1988

• நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990

• பாரத ரத்னா – 1998

"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதும் வழங்கப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு  சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனக் பாராட்டினார்.

Today in History

1916 - எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2004)

1852 - இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1908 - ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1987 - ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

சிறப்பு நாள் : உலக ஓசோன் பாதுகாப்பு நாள்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.3

கல்லாமை

2.1.3

NON-LEARNING

408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு

n-allArkaN patta vaRumaiyin innAthae

kallArkaN patta thiru.

To men unlearned, from fortune's favour greater-evil springs

Than poverty to men of goodly wisdom brings.

பொருள்

Meaning

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

இன்றைய பழமொழி

Today's Proverb

குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?

kuthirai kurudAnAlum, kOLLu thinkiRathil kuRaiya ?

Would the blind horse eat lesser fodder?

Would a person of lesser caliber give up his  luxury?

" A bad horse eats as much as a good one."

இன்றைய சொல்

Today's Word

எக்கியம் (பெ.)

ekkiyam

பொருள்

Meaning

1.     வேள்வி, யாகம்

(Velvi, yAkam)

1. sacrifice.