மும்பையில் நடந்துகொண்டிருக்கும் இக்கொடுமையான சம்பவத்திற்கு அவ்வை தமிழ்ச் சங்கம் வருந்துகிறது. இச் சம்பவத்தில் பலியான அனைத்து மக்களுக்கும் எங்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம். உயிரைத் துச்சமாக மதித்து மக்களின் நலனிற்காக போராடும் அரசாங்க ஊழியர்கள், தாஜ், ஓபராய் நிறுவன ஊழியர்கள், காவல் துறை, இராணுவம், கப்பல்படை வீரர்களை வணங்கி இன்றைய குறளை அவர்களுக்குச் சமர்பிக்கிறோம்.
நவம்பர்-28, ஸர்வதாரி கார்த்திகை 13, ஜில்ஹாயிதா -29 ( tomorrow the kural no. 252 will continue)
இன்றைய குறள்
2. பொருட்பால் (Wealth) – அரசியல் (Royalty)
2.1.25 இடுக்கண் அழியாமை (Hope in Mishap)
623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart.
Meaning :
துன்பம் சூழும்போது , துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
No comments:
Post a Comment