Sunday, July 6, 2008

Daily news letter 6-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 6 2008 ஸர்வதாரி ஆனி 22/ ரஜப் – 2
இன்றைய குறள்


அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

Meaning :


எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

தினம் ஒரு சொல்
அபியுக்தன் - அறிஞன், SCHOLAR OF HIGH STANDING

பொன்மொழி
கோபம் எனும் அமிலம், எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டிருக்கும் கலசத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.

பழமொழி – Proverb
கோபம் சண்டாளம்.

No comments: