Saturday, July 26, 2008

Daily news letter 26-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 26 2008 ஸர்வதாரி ஆடி-11/ ரஜப் – 22
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது.
Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate.
Meaning :
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
தினம் ஒரு சொல்
அரா - பாம்பு,SNAKE
பொன்மொழி
படித்து அறிபவனைவிட அனுபவித்து உணர்பவன் அறிஞன்
பழமொழி – Proverb
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

Friday, July 25, 2008

Daily news letter 25-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 25 2008 ஸர்வதாரி ஆடி-10/ ரஜப் – 21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause.
Meaning :
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் ஏற்படும் தீய செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
தினம் ஒரு சொல்
அரவிந்தம் - தாமரை, LOTUS
பொன்மொழி
குழந்தைகள் கடவுளின் கொடை
பழமொழி – Proverb
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

Thursday, July 24, 2008

Daily news letter 24-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 24, 2008 ஸர்வதாரி ஆடி-9 ரஜப் - 20
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)


163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
Nor wealth nor virtue does that man desire 'tis plain,Whom others' wealth delights not, feeling envious pain.
Meaning :
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
தினம் ஒரு சொல்
அரமியம் - நிலா முற்றம், OPEN TERRACE OF A HOUSE
பொன்மொழி
குறி வைத்தால் மட்டும் போதாது; அடிக்கவும் வேண்டும்
பழமொழி – Proverb
வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்(There is nothing called empty hands. You always have 10 fingers in it. (Your effort is what all you have got) )

Wednesday, July 23, 2008

Daily news letter 23-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 23, 2008 ஸர்வதாரி ஆடி-8 ரஜப் - 19
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)


162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அண்மை பெறின்
No excellence excels the one
That by nature envies none.
Meaning :
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
தினம் ஒரு சொல்
அரம்பன் - குறும்பு செய்பவன் , MISCHIEVOUS PERSON
பொன்மொழி
ஒவ்வொருமுறை துயரப்படும்போதும் ஒரு நல்ல ஆசீர்வாதத்தை இழந்துவிடுகிறோம்
பழமொழி – Proverb
தீதும் நன்றும் பிறர் தர வாரா (Good or bad, it doesnt come from others. You are responsible for what you get/face. )

Tuesday, July 22, 2008

Daily news letter 22-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 22 2008 ஸர்வதாரி ஆடி-7/ ரஜப் – 18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind.
Meaning :
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
தினம் ஒரு சொல்
அரந்தை - துன்பம், TROUBLE
பொன்மொழி
அழகு அதை பார்ப்பவன் கண்களிலேயே பாதி இருக்கும்.
பழமொழி – Proverb
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

Monday, July 21, 2008

Daily news letter 21-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 21 2008 ஸர்வதாரி ஆடி-6/ ரஜப் – 17
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Though 'great' we deem the men that fast and suffer pain,Who others' bitter words endure, the foremost place obtain.
Meaning :
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
தினம் ஒரு சொல்
அயசு - இரும்பு, IRON
பொன்மொழி
இதழ், மலரால் வாசம் வீசும் ரோஜாவைவிட இனிமையானவைகள் மழலைகள்
பழமொழி – Proverb
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

Sunday, July 20, 2008

Daily news letter 20-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 20 2008 ஸர்வதாரி ஆடி-5/ ரஜப் – 16
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness
)
159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure.
Meaning :
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
தினம் ஒரு சொல்
அமரிக்கை - அமைதி, அடக்கம், QUITENESS,MOESTY, UNASSUMINGNESS
பொன்மொழி
நல்ல எண்ணங்களை தூவினால்தான் பலனை பெற முடியும்.
பழமொழி – Proverb
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது