Friday, July 11, 2008

Daily news letter 11-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 11 2008 ஸர்வதாரி ஆனி 27/ ரஜப் – 7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not.

Meaning :
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

தினம் ஒரு சொல்
அம்பணம் - மரக்கால், A GRAIN MEASURE
அம்பணம் - நீர் செல்லும் குழாய், WATER-PIPE
அம்பணம் - யாழ் வகை, A KIND OF LUTE

பொன்மொழி
உண்மை நட்பு இல்லாத நிலையே, மிகக்கொடிய தனிமை.

பழமொழி – Proverb
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

No comments: