Friday, December 4, 2009

Daily news letter 4-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 4, கார்த்திகை – 18, ஜுல்ஹேஜ் – 16

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·      உலக சாதனை படைப்பாரா ஷேவாக்?

·      பள்ளிக்கூட வேன் குளத்தில் பாய்ந்து 9 குழந்தைகள் பலி ...

·      நதிநீர் இணைப்பு திட்டம் ரத்து நாம் கண்ட கனவு கானல் நீராக போய் ...

·      திருச்செந்தூர்-வந்தவாசி: 42 வேட்பு மனுக்கள் ஏற்பு

·      தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க பாராளுமன்றத்தில் மசோதா பாரதீய ...

·      குஜராத்தில் இருந்து நெல்லைக்கு அனுப்பப்பட்ட 42 இலவச கலர் டி.வி ...

·      போலி மருந்து தயாரிப்பு பற்றி தகவல் தந்தால் ஊக்கத் தொகை

·      கூவம் உட்பட நதிகளை சீரமைக்க சென்னை நதிநீர் ஆணையம் அமைப்பு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1791

 உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.

1945

 ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.

1829

 ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பிறப்புகள்

1919

 ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர்

இறப்புகள்

1122

 ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர் (பி. 1048)

1976

 ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900)

சிறப்பு நாள்

இந்தியா கடற்படையினர் தினம்

இன்றைய சிறப்பு மனிதர்

ந.பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

 

இந்திர குமார் குஜ்ரால் (4 டிசம்பர் 1919) இந்தியாவின் 15வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ஓமர் கய்யாம்: கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி (பிறப்பு நேஷபூர், பாரசீகம், மே 18, 1048, இறப்பு டிசம்பர் 4, 1122) ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான செயல்விளக்கம் குறித்த ஆய்வுக்கட்டுரை (Treatise on Demonstration of Problems of Algebra), கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். இதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவவியல் முறை ஒன்றைக் கொடுத்துள்ளார். காலக்கணிப்பு முறையின் மேம்பாட்டுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

ஆCஇன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.11

காலமறிதல் (kAlamaRithal)

2.1.11

Knowing the Proper Time

483

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

Aruvinai enpa uLavO karuviyAn

kAlam aRin-thu seyin

Can any work be hard in very fact,

If men use fitting means in timely act?.

பொருள்

Meaning

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
 
 

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.

இன்றைய பொன்மொழி

கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இன்றைய சொல்

Today's Word

அங்குலி

Anguli

பொருள்

Meaning

1.     விரல் (viral)

2.     யானைக்கைநுனி

1.     Finger

2.     Tip of the elephant's trunk

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

Thursday, December 3, 2009

Daily news letter 3-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 3, கார்த்திகை – 17, ஜுல்ஹேஜ் – 15

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·      குடியரசுத் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

·      திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்?

·      குறைந்த காற்றழுத்தம் தீவிரம் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும்

·      இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேற்று ...

·      `400 ரன்கள் இலக்கு'-தில்ஷன்

·      இந்துமதத்துக்கு எதிராக பாடத்திட்டமா? பள்ளிக் கல்வி அமைச்சர் ...

·      ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 600 வீரர்களை அனுப்ப திட்டம்

·      மகா தீபம் ஏற்றப்பட்டது

·      ஆந்திராவில் ரெயில், பஸ்களுக்கு தீவைப்பு

·      ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகள் 6-ந் தேதி ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1904

 வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1917

 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.

1999

 செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.

2007

 இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

பிறப்புகள்

1795

 ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)

1884

 ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)

சிறப்பு நாள்

அனைத்துலக ஊனமுற்றோர் நாள்

இன்றைய சிறப்பு மனிதர்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.
 

இன்றைய சிறப்பு நாள்

அனைத்துலக ஊனமுற்றோர் நாள் (International Day of Disabled Persons) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் நாளன்று உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.
 

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.11

காலமறிதல் (kAlamaRithal)

2.1.11

Knowing the Proper Time

482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.

paruvaththOdu otta ozukal thiruvinaith

theerAmai aarkkung kayiRu

The bond binds fortune fast is ordered effort made,

Strictly observant still of favouring season's aid.

பொருள்

Meaning

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

இன்றைய பொன்மொழி

பொறுமையை அறிந்தவனுடைய வார்த்தைகளும் செயல்களும் காலத்திற்கப்பாற்பட்டது.

இன்றைய சொல்

Today's Word

அங்குட்டம்

Anguttam

பொருள்

Meaning

1.     பெருவிரல் (peruviral)

1.     The Thumb

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India