Saturday, October 4, 2008

Daily news letter 04-10-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

October 4,2008 ஸர்வதாரி புரட்டாசி 18 (பஞ்சமி / அனுஷம்) ஷவ்வால் -4
Today in History: October 4

1537 - The first complete English-language Bible (the Matthew Bible) is printed, with translations by William Tyndale and Miles Coverdale.
Birth
Subramaniya Siva (4 October 1884 - 23 July 1925) was an Indian freedom fighter and prolific writer. He was arrested many times between 1908 and 1922 for his anti-imperialist activities.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/October_4
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.19. ஈகை (Charity)

224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
The suppliants' cry for aid yields scant delight,Until you see his face with grateful gladness bright.
Meaning :
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புனைகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இராக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.
தினம் ஒரு சொல்
ஆரியம் - கேழ்வரகு, ragi
பொன்மொழி
சந்தோஷமான குடும்பமே தரணியில் சொர்க்கம்.

Friday, October 3, 2008

Daily news letter 03-10-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

October 3,2008 ஸர்வதாரி புரட்டாசி 17 (சதுர்த்தி / விசாகம்) ஷவ்வால் -3
Today in History: October 3

1990 - Re-unification of Germany. The German Democratic Republic ceased to exist and its territory became part of the Federal Republic of Germany. East German citizens became part of the European Community, which later became the European Union. Now celebrated as German Unity Day.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/October_3
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.19. ஈகை (Charity)

223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
'I've nought' is ne'er the high-born man's reply;He gives to those who raise themselves that cry.
Meaning :
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறர்க்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.
தினம் ஒரு சொல்
ஆராமம் - பூங்கா, PARK
பொன்மொழி
எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

Thursday, October 2, 2008

Daily news letter 02-10-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

October 2,2008 ஸர்வதாரி புரட்டாசி 16 (திருதியை / சுவாதி ) ஷவ்வால் -2
Today in History: October 2

2-October-1845 First Shipping Company of India started.
2-October-1934 Indian Naval Force was established.
BIRTH
2-October-1869 Mohandas Karamchand Gandhi (Mahatma Gandhi)
2-October-1904 Lal Bahadur Shastri, the second Prime Minister of India (1964-66)
2- October - 1908 T.V.Ramasubbaiyar, Founder of Dhinamalar.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/October_2
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.19. ஈகை (Charity)

222. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
Though men declare it heavenward path, yet to receive is ill;Though upper heaven were not, to give is virtue still.
Meaning :
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்கு கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
தினம் ஒரு சொல்
ஆரணியம் - காடு, forest
பொன்மொழி
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான். - மகாத்மா காந்தி.
பழமொழி – Proverb
தீதும் நன்றும் பிறர் தர வாரா

Wednesday, October 1, 2008

Daily news letter 01-10-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam (International Day of Older Persons)

October 1,2008 ஸர்வதாரி புரட்டாசி 15 (துதியை / சித்திரை) ஷவ்வால் - 1
Today in History: October 1

1854 - Postal stamp introduced in India.
1869 - Austria issues the world's first postcards.
Birth:
1847 Annie Besant, famous philosopher and thesophist, was born in London
1918- "Govindappa Venkataswamy (b.Oct, 1 1918, Vadamalapuram, Tamil Nadu) is an Indian ophthalmologist and 1973 recipient of Padma Sri award.”
1927 - Sivaji Ganesan (born Viluppuram Chinnaiahpillai Ganesan, October 1, 1927 - July 21, 2001)
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/October_1
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.19. ஈகை (Charity)

221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..
Call that a gift to needy men thou dost dispense,All else is void of good, seeking for recompense.
Meaning :
இல்லாதார்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.
தினம் ஒரு சொல்
ஆர்வலி - அன்பு கொள், Be Loving
பொன்மொழி
காலத்தில் செய்வதை தள்ளிப்போடவேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்
பழமொழி – Proverb
நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

Monday, September 29, 2008

Daily news letter 29-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 29,2008 ஸர்வதாரி புரட்டாசி 13 (அமாவசை , உத்திரம்) / ரம்ஜான் – 28
Today in History: September 29
1954 - The convention establishing CERN (European Organization for Nuclear Research) is signed.
1971 - Oman joins the Arab League.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_29
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)

220. ஒப்புரவினால்வரும் கேடெனின் அ·தொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
Though by 'beneficence,' the loss of all should come,'Twere meet man sold himself, and bought it with the sum.
Meaning :
பிறர்க்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.
தினம் ஒரு சொல்
ஆர்பதம் - 1. வண்டு, beetle , 2. உணவு, food
பொன்மொழி
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது - எமர்சன்
பழமொழி – Proverb
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.