Saturday, July 12, 2008

Daily news letter 12-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam


NEXT PROGRAM FROM AVVAI TAMIL SANGAM ON
27-7-2008. FOR DETAILS VISIT
http://avvaitamilsangam.googlepages.com/programs
========================================================================================================
July 12 2008 ஸர்வதாரி ஆனி 28/ ரஜப் – 9
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best.

Meaning :
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

தினம் ஒரு சொல்
அம்பா - தாய், MOTHER

பொன்மொழி
சுதந்திரம் இல்லாத தேசம், உயிர் இல்லாத உடலைப் போன்றது.

பழமொழி – Proverb
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

Friday, July 11, 2008

Daily news letter 11-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 11 2008 ஸர்வதாரி ஆனி 27/ ரஜப் – 7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not.

Meaning :
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

தினம் ஒரு சொல்
அம்பணம் - மரக்கால், A GRAIN MEASURE
அம்பணம் - நீர் செல்லும் குழாய், WATER-PIPE
அம்பணம் - யாழ் வகை, A KIND OF LUTE

பொன்மொழி
உண்மை நட்பு இல்லாத நிலையே, மிகக்கொடிய தனிமை.

பழமொழி – Proverb
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

Thursday, July 10, 2008

Daily news letter 10-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam


அவ்வை தமிழ்ச் சங்கம்
(Registered as Avvai Tamil Sangam & Charitable Society)
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315


July 10 2008 ஸர்வதாரி ஆனி 26/ ரஜப் – 6
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife
)

149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?The men who touch not her that is another's bride.

Meaning :
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.

தினம் ஒரு சொல்
அபோதம் - அறியாமை, IGNORANCE, STUPIDITY

பொன்மொழி
வாக்குறுதி கொடுப்பது சத்தியத்திற்கும் மேலானது.

பழமொழி – Proverb
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

Wednesday, July 9, 2008

Daily news letter 9-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 9 2008 ஸர்வதாரி ஆனி 25/ ரஜப் – 5
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life.

Meaning :
வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
தினம் ஒரு சொல்
அபேட்சகர் - வேட்பாளர், CANDUDATE FOR AN ELECTION

பொன்மொழி
நட்பின் கற்புத் தன்மையே ரகசியம் என்பது.

பழமொழி – Proverb
கெடுவான் கேடு நினைப்பான்

Tuesday, July 8, 2008

Daily news letter 8-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 8 2008 ஸர்வதாரி ஆனி 24/ ரஜப் – 4
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously.

Meaning :
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்க்கொண்டவன் எனப்படுவான்.
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

தினம் ஒரு சொல்
அபுதன் - மூடன், STUPID FELLOW

பொன்மொழி
மேன்மக்கள் பிறர் செய்த தீமைகளை நினைக்க மாட்டார்கள்.

பழமொழி – Proverb
தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

Monday, July 7, 2008

Daily news letter 7-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 7 2008 ஸர்வதாரி ஆனி 23/ ரஜப் – 3
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)

146. பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four.

Meaning :
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை , அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.

தினம் ஒரு சொல்
அபிராமம் - அழகானது, இனிமையானது THAT WHICH IS LOVELY OR PLEASING

பொன்மொழி
எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான்.

பழமொழி – Proverb
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

Sunday, July 6, 2008

Daily news letter 6-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 6 2008 ஸர்வதாரி ஆனி 22/ ரஜப் – 2
இன்றைய குறள்


அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

Meaning :


எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

தினம் ஒரு சொல்
அபியுக்தன் - அறிஞன், SCHOLAR OF HIGH STANDING

பொன்மொழி
கோபம் எனும் அமிலம், எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டிருக்கும் கலசத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.

பழமொழி – Proverb
கோபம் சண்டாளம்.