Monday, December 13, 2010

Daily news letter 13-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 13  திங்கள்,  கார்த்திகை–27,   முஹர்ரம் – 6

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றி தகவல் தர 10 நாடுகள் சம்மதம்

செயல்படாமல் முடிகிறது குளிர் கால கூட்டத் தொடர்?: அடுத்தது என்ன ...

குமாரசாமியின் அழைப்பை ஏற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ...

தமிழ் மொழி இனியது; ஆனால் கற்பதற்கு கடினம்: டில்லி முதல்வர்

தில்லி திரும்பினார் மன்மோகன் சிங்

ஜெர்மன் கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

அமெரிக்க தீவை வாங்க திட்டமிட்டிருந்த சாமியார் நித்தியானந்தா

சபரிமலை விவரங்கள் அடங்கிய இணைய தளம் தொடக்கம்

தங்கம் விலையைத் தொட்டது கனகாம்பரம் பூவின் விலை

கார் விபத்தில் நடிகர் ராமராஜன் காயம்; டிரைவர் சாவு

ரூ. 543 கோடி மதிப்பீட்டில் 7 திட்டப் பணிகள்: முதல்வர் கருணாநிதி

ஹாங்காங் ஓபன்: பட்டம் வென்றார் சாய்னா

தெண்டுல்கரின் இரட்டை சதத்திற்கு அங்கீகாரம்

சிறந்த 10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியலில் சச்சினின் இரட்டை சதம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1577

சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

1642

ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.

1959

மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.

1972

அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.

1974

மோல்ட்டா குடியரசானது.

1981

போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1996

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.

2006

பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

இறப்புகள்

1987

நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.5

படை செருக்கு(padai cherukku)

2.3.5

Pride of Warriors

The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice.

771

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.

ennaimun n-illanmin tevvir palarennai

munn-inRu kaln-in Ravar.

Ye foes! stand not before my lord! for many a one

Who did my lord withstand, now stands in stone!.

பொருள்

Meaning

போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.

இன்றைய பொன்மொழி

உண்மையான் ஒழுக்கம், துன்பம் எனும் பள்ளியில்தான் பாதுகாக்கப்படுகிறது.

இன்றைய சொல்

Today's Word

ஐவேசு (பெ)

Aivesu

பொருள்

Meaning

1.       சொத்து (soththu)

1.     Property

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: