Tuesday, October 6, 2009

Daily news letter 06-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 06, புரட்டாசி - 20, ஷவ்வால் – 16

Today in History

1870 - ரோம் இத்தாலியின் தலைநகரானது.

1987 - பிஜி குடியரசாகியது.

1889 - தான்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.

1889 - தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்.

1927 - உலகின் முதலாவது பேசும் படம் தி ஜாஸ் சிங்கர் வெளியானது. 

1995 - சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.5

அறிவுடைமை

2.1.5

POSSESSION OF WISDOM

427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

aRivudaiyAr aava thaRivAr aRivilAr

aqthaRi kallA thavar.

The wise discern, the foolish fail to see,

And minds prepare for things about to be.

பொருள்

Meaning

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

இன்றைய பழமொழி

Today's Proverb

காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல

kAintha mAdu kambile vizhunthARpOla

பொருள்

பழங்காலத்தில் தமிழர்கள் நெல்லை மட்டும் விதைக்கவில்லை. நெல்லைத் தவிர கம்பு, வரகு, சாமை போன்ற பலவகையான தானியங்களைப் பயிர் செய்தார்கள். நெல்லு விதைத்த இடத்தை வயல் என்பது போல், கம்பு என்ற தானியம் பயிர் செய்த இடத்தைக் கொல்லை என்பார்களாம். கம்பு, நெல்லை விட மலிவானதும், இலகுவாகப் பயிர் செய்யப்படக் கூடியதுமாகும்.

பசியால் வாடிக்காய்ந்த மாடு எப்படிக் கம்பிலே விழுந்ததோ, அதாவது விழுந்து, விழுந்து சாப்பிட்டது போல, காணாததைக் கண்டவன் போல, யாராவது அவசரப்பட்டால் இந்தப் பழமொழியைக் கூறுவார்கள்.

இன்றைய சொல்

Today's Word

எடுத்துச்செலவு பெ.

eduthuchselavu

பொருள்

Meaning

1.  போருக்குப் படைநடத்திச் செல்லுதல் (pOrukup patai nadaththich selluthal)

1.  Leading forth an army for an invasion.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: