Sunday, July 27, 2008

Daily news letter 27-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 27 2008 ஸர்வதாரி ஆடி-12/ ரஜப் – 23
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
Who scans good gifts to others given with envious eye,His kin, with none to clothe or feed them, surely die
Meaning :
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
தினம் ஒரு சொல்
அரிசம் - மகிழ்ச்சி, JOY, PLEASURE
பொன்மொழி
சரியாக சிந்திக்க தெரிந்துகொண்டால், ஜகத்தையே மாற்றிவிடலாம்
பழமொழி – Proverb
சொல்வல்லவனை வெல்லல் அரிது.

No comments: