Tuesday, April 20, 2010

Daily news letter 20-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 20,  சித்திரை – 7,  ஜமாதில் ஆவ்வல் – 4

முக்கிய செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: மேகாலய முதல்வர் ராஜிநாமா 

போலிநிதி நிறுவனங்களால் ஆயிரம் கோடி மோசடி போலீஸ் எச்சரிக்கை 

புதுமை செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் டாடா, ரிலையன்ஸ்

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு. தூசுகளால் பாதிப்பு இல்லை. 

ஐ.பி.எல். அரையிறுதிப்போட்டிகள் மும்பைக்கு மாற்றம் 

கலிஃபோர்னியா மாகாண நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

மனுசர்மா ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

சுவாமி நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் 

பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி விசைத்தறிகள்...

சோயிப் மாலிக் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவு

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1859

சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.

1862

லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.

1902

பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.

1926

திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1945

அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

1972

அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.

பிறப்புகள்

1808

 மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)

1889

 அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945)

1910

சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)

மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1875இல் ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் இது வெளியானது).

விருதுகள்

 

ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்டவர்.

1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ரோல் ஆஃப் ஹானர் விருது வழங்கப் பெற்றவர்.

தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.

1950

 நா. சந்திரபாபு நாயுடு, இந்திய அரசியல்வாதி

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.23

மடியின்மை (சோம்பல் படாமை)

(madi inmai)

2.1.22

Freedom from Sloth

Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts.

602

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

Madimadik koNdozukum pethai piRan-tha

Kudimadiyum thanninum mun-thu.

Who fosters indolence within his breast, the silly elf!

The house from which he springs shall perish ere himself.

பொருள்

Meaning

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

இன்றைய பொன்மொழி

நம்பிக்கையில்லாமல் செய்யும் எந்த முயற்சியும் பலனளிக்காது.

இன்றைய சொல்

Today's Word

ஏகாங்கி(பெ.)

EkAngki

பொருள்

Meaning

1.     குடும்பப் பொறுப்பின்றித் தனித்து வாழ்பவர்

Kudumpap poRuppinRi thaniththu  vAzpavar

1.     One who has no family

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: