Thursday, December 10, 2009

Daily news letter 10-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 10,  கார்த்திகை – 24,  ஜுல்ஹேஜ் – 22

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·         உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இணையதளம்

·         12 மலைச்சாரல்களை கொண்டுள்ளது: தமிழக சுற்றுலா துறையின் 2010-ம் ...

·         இந்தியா பரிதாப தோல்வி : சங்ககரா அதிரடியில் இலங்கை அபாரம்

·         பழனி பகுதியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா காங்கிரசார் ...

·         ஈரான் நாட்டு அணு விஞ்ஞானியை அமெரிக்கா கடத்தியதாக புகார்

·         இந்திய மாணவருக்கு கத்திக்குத்து இனவெறி தாக்குதல் தொடர்கிறது

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1684

 ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.

1868

 உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.

1901

 முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

1902

 அஸ்வான் அணை திறக்கப்பட்டது.

1902

 தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1750

 திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (இ. 1799)

1878

 ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)

றப்புக்கள்

1987

 சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (பி. 1948)

சிறப்பு நாள்

மனித உரிமைகள் நாள்

நோபல் பரிசு அளிக்கும் வைபவம்

சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு தினம்

இன்றைய  சிறப்பு மனிதர்கள்

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1878 - 1972) தமிழகத்தில் சேலம் நகரில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். இராஜாஜி என்று அழைக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

 

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிறப்பு நாள்

Today's Kural

உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும்.

 

நோபல் பரிசு அளிக்கும் வைபவம் (Nobel Prize) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும். இது வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.

வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று , அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவிடன்-யில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

seRun-arai kANin sumakka iRuvarai

kANin kizakkAm thalai.

If foes' detested form they see, with patience let them bear;

When fateful hour at last they spy,- the head lies there.

பொருள்

Meaning

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

இன்றைய பொன்மொழி

உலகில் நிலையான உறவு விவெகம், நிலையான இனம் அறிவு.

இன்றைய சொல்

Today's Word

எதிர்நிலை (பெ.)

Ethirn-ilai

பொருள்

Meaning

1.     மாறான நிலை

1.  opposite stand.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: