Saturday, September 26, 2009

Daily news letter 26-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 26, புரட்டாசி - 10, ஷவ்வால்- 6

இன்று : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – நினைவு நாள் (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1959)

தேசிக விநாயகம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி'யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்

கவிமணியின் நூல்கள்:

ஆசிய ஜோதி , (1941)

மலரும் மலையும், (1938)

மருமக்கள்வழி மான்மியம், (1942)

கதர் பிறந்த கதை, (1947)

உமார் கய்யாம், (1945)

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

இவர் பெற்ற விருதுகள்:

1940இல் தமிழ்ச் சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

Today in History

 

1580 - சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்

1954 - ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்:

1890 - பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)

1908 - பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)

1932 - மன்மோகன் சிங், இந்தியப் பிரதமர்

1981 - செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்:

1959 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)

1987 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் (பி. 1963)

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.4

கேள்வி

2.1.4

Listening To Instruction

417

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.

pizaiththuNarn-thum paethaimai solar izaiththuNarn-thu

iiNdiya kaeLvi yavar

Not e'en through inadvertence speak they foolish word,

With clear discerning mind who've learning's ample lessons heard.

பொருள்

Meaning

எதையும் நுணுகி* ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).

இன்றைய பழமொழி

Today's Proverb

தூர்ந்த கிணற்றைத் தூர்வாராதே

Thoorntha kiNatRaith ThoorVArAthe

Dont try to clear a well that has been filled up.

மறந்துபோன சங்கதியைக் கிளறாதே.

Don't stir up what is forgotten

" Do not rake the gutters"

" Let sleeping dogs lie"

இன்றைய சொல்

Today's Word

நுணுகி வி.அ.

nuNuki

பொருள்

Meaning

1.  கூர்ந்து, துல்லியமாக

1.  Keenly, sharply, closely

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: