Wednesday, September 16, 2009

Daily news letter 16-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 16, ஆவணி - 31, ரமலான்- 26

இன்று: இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்த நாள்.

தமிழ் தாய் அவ்வையின் "விநாயகர் அகவல்",  இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் உங்களுக்காக அவ்வை தமிழ் சங்க இணையத்தளத்தில் upload செய்யப்பட்டுள்ளது.

Alternate link: http://www.youtube.com/watch?v=-WlNhbEgjNc

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் அவர்களை 1940 ஆண்டு சுப்புலட்சுமி அவர்கள் மணந்தார்.

இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன.

1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடாத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி, மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.

எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் வாங்கிய விருதுகள் :

  பத்ம பூசண் – 1954

• சங்கீத கலாநிதி - 1968

• ராமன் மகசேசே விருது - 1974

• பத்ம விபூசண் - 1975

• காளிதாச சன்மான் - 1988

• நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990

• பாரத ரத்னா – 1998

 

"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதும் வழங்கப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு  சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனக் பாராட்டினார்.

 

 

Today in History

 

1916 - எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2004)

1852 - இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1908 - ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1987 - ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

சிறப்பு நாள் : உலக ஓசோன் பாதுகாப்பு நாள்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.3

கல்லாமை

2.1.3

NON-LEARNING

408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு

n-allArkaN patta vaRumaiyin innAthae

kallArkaN patta thiru.

To men unlearned, from fortune's favour greater-evil springs

Than poverty to men of goodly wisdom brings.

பொருள்

Meaning

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

இன்றைய பழமொழி

Today's Proverb

குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?

 

kuthirai kurudAnAlum, kOLLu thinkiRathil kuRaiya ?

 

Would the blind horse eat lesser fodder?

 

Would a person of lesser caliber give up his  luxury?

" A bad horse eats as much as a good one."

இன்றைய சொல்

Today's Word

எக்கியம் (பெ.)

ekkiyam

பொருள்

Meaning

1.     வேள்வி, யாகம்

(Velvi, yAkam)

1. sacrifice.

 

 

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: