Thursday, April 16, 2009

Daily news letter 16-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஏப்ரல் -16, சித்திரை – 3, ரப்யுஸானி -19
Today in History:
1959 – Raurkela Iron Project's first furnace started functioning.
1849 – Hungary becomes a republic.
1853 – The first passenger rail opens in India, from Bori Bunder, Bombay to Thane.
1912 – Harriet Quimby becomes the first woman to fly an airplane across the English Channel.
1919 – Mohandas Gandhi organizes a day of "prayer and fasting" in response to the British slaughter of Indian protesters in the Amritsar Massacre.
1946 – Syria gains independence
. BIRTH
1918 - Lalita Pawar, famous actress of Indian film industry, was born.
1918 - Spike Milligan, famous actor and comedian (Digby, 3 Musketeers), was born in India.
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_16
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)

317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை.
To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.
Meaning :
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.
தினம் ஒரு சொல்
இலங்கிழை - ஒளிர்கின்ற அணிகள் பூண்டுள்ள பெண், woman adorned with glittering ornaments
நம் பூமி; அதை காப்பது நம் கடமை:
உங்கள் வீட்டில் அதிகம் உபயோகிக்கப்படும் 5 முக்கிய மின் விளக்குகளை ( பல்பு, டியுப் லைட்) "எனர்ஜி ஸ்டார் ( சக்தி நக்ஷத்திரம் ???)" (Energy Star) மதிப்பு பெற்ற விளக்குகளா என சோதித்து மாறுதல் செய்யவும். இதனால் நீங்களும் மின்சாரம் சேமிக்கலாம், மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் மாசுபாட்டையும் குறைக்கலாம்.
உலகம் செழிக்க நம்மால் ஆவதை செய்ய அறிவுரைக்கும் இம்முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் மேற்கொள்ள அறிவுறித்திய திரு.சுரேஷ் (Times of India) அவர்களுக்கு நன்றி.
ஹெல்த்டிப்ஸ் : தண்ணீர்
நமது உடல் 80% தண்ணீரால் ஆனது. உடலில் 10% நீர் குறைந்தால் நலம் கெடுகிறது. 20% குறைந்தால் உயிர் போகிறது.
ஒருவர் தினமும் குறைத்து 8 டம்ளர் நீர் அருந்த வேண்டும்.
தண்ணீர் அடிக்கடி குடிப்பதால் :
1.உணவு செரிக்கும்,
2.சுரைப்பிகள் துண்டிவிடப்பட்டு நன்றாகச் சுரக்கும்.
3. இரத்தம் உடலெங்கும் பரவும்.
4. உடலின் நச்சுப் பொருள்கள் கண்ணீர், வியர்வை, சிறுநீராக வெளிப்படும்.
5. சருமம் பளபளக்கும்.
6. எலும்பு பலப்படும்.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
நியாயத்தின் பொருட்டு ஒருவருடன் வெளிப்படையாக விவாதிப்பது சிறப்பாகும்.

No comments: