Tuesday, April 26, 2011

Daily news letter 26-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

துவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா  30/4 & 1/5 – 2011

இடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம், புது தில்லி  ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)

30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி

1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி

மேலும் விவரங்களுக்கு :

சுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் -  9868230055, ஜெய்சங்கர் 9810116465

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௧ ௩  (13) , செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

இசுலாமிய நாட்காட்டி உண்மையான சந்திர நாட்காட்டி. கிரெகொரியின் நாட்காட்டி உண்மையான சூரிய நாட்காட்டி. ஆனால் சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகளோ சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

எதிரிகள் பட்டியலில் தயாளு பெயரைச் சேர்க்காதது ஏன்? சிபிஐ ... தினமணி 

பாகிஸ்தானுக்கு பெட்ரோல் ஏற்றுமதி இந்தியா அனுமதி தினகரன்

அவதூறு பரப்பும் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தினகரன்

சென்னைக்கு மூன்றாவது வெற்றி தினமணி

சுரேஷ் கல்மாடி கைது தினத் தந்தி

சாய்பாபா மறைவு: நேபாள பிரதமர் இரங்கல்  நக்கீரன்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும் தினமலர்

சிரியாவிற்கு பான் கீ மூன் கண்டனம்! வெப்துனியா

கந்தஹார் சிறையில் இருந்து 476 தாலிபான்கள் தப்பியோட்டம் தட்ஸ்தமிழ்

நாட்டிலேயே மே.வங்கம் மோசமான மாநிலம் : சிதம்பரம் தினமலர்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1802 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.

1805 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.

1937 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

1945 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1954 - பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

1964 - தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.

1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1994 - உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.

2005 - 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

பிறப்புகள்

1564 - வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616)

1762 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)

இறப்புகள்

1920 - சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887)

1897 - பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)

1977 - எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)

சிறப்பு நாள்

தான்சானியா - தேசிய நாள்

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  867

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

Koduththum KoLalvendum manra aduththirunthu

mANAtha seivAn pagai

Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- 'tis cheap at any price- be sure to buy!.

பொருள்

Meaning

தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).

இன்றைய பொன்மொழி

எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேருகிறது.   

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: