Monday, April 4, 2011

Daily news letter 04-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  1. யுகாதி ( தெலுங்கு வருடப் பிறப்பு) வாழ்த்துக்கள்
  2. "முயற்சி திருவினையாக்கும்" எனும்  மூதுரையை சிரமேற்கொண்டு பாடுபட்டு உலகக் கோப்பையை வென்ற திரு. தோனி அவர்களின் தலைமையிலான இந்திய துடுப்பாட்ட அணிக்கு எங்கள்  நன்றிகள்.
  3. ஈகரை வலைதளம் வழங்கும் மாபெரும் கவிதைப் போட்டி

கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்   2. சமுதாயம்    3, அரசியல்

விதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com . மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லுங்கள்.... http://www.eegarai.net/t55497-4

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 21, திங்கள் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilmantram.com/vb/

தமிழ் மன்றம் ஒரு நல்ல வலைபதிவு.

தெரிந்து கொள்ளுங்கள்  

உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

தாக்குதல் வழக்கில் அழகிரிக்கு முன் ஜாமீன்  பிபிசி 

இன்று யுகாதி பண்டிகை தலைவர்கள் வாழ்த்து தினகரன்

தமிழகம், புதுவையில் ராகுல் 2 நாள் பிரசாரம் தினமணி 

இந்திய கிரிக்கெட் அணிக்கு பாக்.பிரதமர் வாழ்த்து தினமலர்

சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் தினமலர்

இன்று அசாமில் முதல் கட்ட தேர்தல் 62 தொகுதிகளில் வாக்குப்பதிவு ... தினத் தந்தி

அணு உலை விரிசலால் புகுஷிமாவில் கதிர்வீச்சு கசிவு தினகரன்

தோனிக்கு பாரத்ரத்னா விருது: ஜார்க்கண்ட் அரசு பரிந்துரை  தினமலர் 

2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை: பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன் நீரா ... தினத் தந்தி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 41 பேர் பலி நக்கீரன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.

1866 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தான்.

1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை பலியாயினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1949 - பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.

1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டார்.

1968 - அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.

1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் மாற்றும் போல் அலென் ஆகியோரின் கூட்டில் தொடங்கப்பட்டது.

1976 - இளவரசர் நொரொடோம் சிஹானூக் கம்போடியா தலைவர் பதவியில் இருந்த் விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1983 - சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1999 - பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.

2002 - அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

பிறப்புகள்

1855 - மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழ் அறிஞர். (இ.1897)

இறப்புகள்

1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அதிபர் (பி. 1773)

1929 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர், (பி. 1844)

1968 - மார்டின் லூதர் கிங், கறுப்பினத் தலைவார். (பி. 1929)

1979 - சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் அதிபர் (பி. 1928)

சிறப்பு நாள்

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்

தாய்வான், ஹொங்கொங் - சிறுவர் நாள்

செனகல் - விடுதலை நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  856

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

Igalin migalinithu enbavan vAzhkkai

Tavalum kedalum naNinthu.  

The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.

பொருள்

Meaning

இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

இன்றைய பொன்மொழி

வாய்ப்பை எதிர்பார்க்காமல் வாய்ப்பை உண்டாக்குபவன் தான் அறிஞன்     

இன்றைய சொல்(Today's Word)

ஓசனி (வி)

VOsani

பொருள்

Meaning

1.        சிறகடி ( பறவை போல்)

1.     flap the wings ( as birds)

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: