Tuesday, March 29, 2011

Daily news letter 29-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ARAM SEYA VIRUMBU :- Avvai Tamil Sangam wants to collect record of Blood donors and keep a list on their website for emergency use. We are enclosing a template herewith. Please fill in the details if willing to donate blood and replace XXX with your name. We will keep a list citywise , statewise and countrywise to help the needy. Please pass on to your friends & relatives  as well. 
Those who have already responded to this need not have to send again. 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 15, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.vallalar.org/Tamil 

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். மேலும் அறிய இந்த வலைத்தளம் உதவும்.

தெரிந்து கொள்ளுங்கள்  

தமிழ் நாடு சட்டப் பேரவைத் தொகுதிகள் மொத்தம் 234. ஆனால், அரசமைப்புச் சட்டப்பிரிவின் 333- ஆம் கூறுப்படி, ஆங்கிலோ-இந்திய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதால் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 235..

முக்கிய செய்திகள் – Top Stories

மயிலையில் திடீர் வேட்பாளர் தங்கபாலு

இலங்கையை வெளியேற்றுமா நியூஸீலாந்து?

8 இந்தியர்கள் மீதான மரணதண்டனை : ரத்து செய்தது சார்ஜா கோர்ட்

 பங்குச் சந்தையில் தொடர்ந்து முன்னேற்றம்

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் -

சரியான திசையில் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு: ஷான் டெய்ட்  

வெளிநாட்டு வாழ்இந்தியர்கள் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வைகோ முடிவு துரதிர்ஷ்டவசமானது: இல.கணேசன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1632 - கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.

1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.

1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.

1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

1867 - கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.

1886 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.

2004 - பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.

2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.

2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

பிறப்புக்கள்

1790 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி (இ. 1862)

1918 - சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் (இ. 1992)

1927 - ஜோன் வேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2004)

இறப்புக்கள்

1985 - ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (பி. 1897)

2000 - சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை

சிறப்பு நாள்

தாய்வான் - இளைஞர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

igalenba ellA uyirkkum pagalennum

paNbinmai pArikkum No-i

Hostility disunion's plague will bring,
That evil quality, to every living thing.

பொருள்

Meaning

மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

இன்றைய பொன்மொழி

எழுதப்படும் சொல்லிவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது – நல்லதையே பேசுங்கள்.  

இன்றைய சொல்(Today's Word)

ஓகாரம்

vOkAram

பொருள்

Meaning

1.        மயில்  

 

1.     peacock

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: