Wednesday, December 2, 2009

Daily news letter 2-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 2, கார்த்திகை – 16, ஜுல்ஹேஜ் – 14

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·      ஆப்கான், பருவநிலை மாற்றம் பிரச்சினைகள்: மன்மோகன்சிங்குடன் ...

·      தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் மரணம்

·      ஜார்க்கண்டில் வன்முறையுடன் முடிந்த முழு அடைப்பு

·      இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு சமத்துவ மக்கள் கட்சி முடிவு

·      ஹெட்லிக்கு சிறைக் காவல் - விசாரணை காலவரையின்றி தள்ளிவைப்பு

·      குழந்தைகளை தத்தெடுக்கும் கமல்

·      சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்வு

·      வரலாறு காணாத விலையேற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1908

 பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.

1988

 பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.

1993

 ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2006

 பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

பிறப்புகள்

1910

 ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்

1933

 கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.

இறப்புகள்

911

 பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)

1933

 ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்

2008

 மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)

சிறப்பு நாள்

ஐக்கிய நாடுகள் அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்.

இன்றைய சிறப்பு மனிதர்கள்

இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

 

பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 3, 1867 - டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

 

மு. கு. ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933 - டிசம்பர் 2, 2008) ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். 1989 ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூல்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.11

காலமறிதல் (kAlamaRithal)

2.1.11

Knowing the Proper Time

481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

Pakalvellum kukaiyaik kAkkai ikalvellum

Vaen-tharkku vaeNdum pozuthu.

A crow will conquer owl in broad daylight;

The king that foes would crush, needs fitting time to fight.

பொருள்

Meaning

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

இன்றைய பொன்மொழி

தீமையை தீமை என்று அறியும் பொழுதே தீமை விலகுகிறது.

இன்றைய சொல்

Today's Word

அகளம்

akaLi

பொருள்

Meaning

1.     தாழி (thAzi)

2.     மிடா (midA)

1.     A water-pot

2.     A large earthen pot

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: