Friday, November 6, 2009

Daily news letter 6-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 6, ஐப்பசி – 20, ஜில்ஹாயிதா – 18

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

 

 

·    மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்' ஷோபா அறிவிப்பு.

·         மேலும் 40 லட்சம் கலர் 'டிவி' கொள்முதல்

·         நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்' மாவோயிஸ்டுகள் ...

·         சச்சின் சதம் (175) வீண்

·         ஹவாலா மோசடி வழக்கில் கைதாகிறார் மது கோடா

·         திருப்பதி பிரமோற்சவம்

·         மராட்டியத்தில் புதிய அரசு நாளை பதவி ஏற்பு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங், பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

1943 - இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.

1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு   போடுவதற்கு இது பயன்பட்டது.

 பிறப்பு: 1861 - ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (இ. 1939)

இறப்பு: 1893 - பீட்டர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1840)

இன்றைய சிறப்பு:

 

பண்பலை ஒலிபரப்பு: வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.

 

இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

Manan-thUyArk kechchamn-an RAkum inan-thUyArkku

Illain-an RAkA vinai.

From true pure-minded men a virtuous race proceeds;

To men of pure companionship belong no evil deeds.

பொருள்

Meaning

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

இன்றைய பொன்மொழி

கல்வி கற்பதைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது.

இன்றைய சொல்

Today's Word

எண்மயம் பெ.

eNmayam

பொருள்

Meaning

1.  பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு அகியவற்றின் அடியாகப் பிறந்த எட்டு வகைச் செருக்கு.

piRappu, kulam, vali, selvam, vanappu, siRappu, thavam, uNarvu, akiyavaRRin adiyAkap piRan-tha ettu vakaich serukku.

1.  The eight kinds of pride begotten respectively by birth, lineage, prowess, riches, loveliness, eminence, penance and knowledge.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: