Friday, October 23, 2009

Daily news letter 23-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 23, ஐப்பசி – 6, ஜில்ஹாயிதா – 4

 

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

இன்று: தலைநகரில் இறையுணர்வு இசை மழை

திருவருட்பா இசைப்பேரரசு  மழையூர் எஸ். சதாசிவம் குழுவினர் வழங்கும் தேவாரம், திருவாசகம், பாசுரம், திருவருட்பா பாடல்கள்.

எஸ். பாலவீரா ராகவன் - வயலின்

எஸ். யுகராஜன்                 - மிருதங்கம்

கே.எஸ்.சரவணன்           - மோர்சிங்

எஸ்.குமரேசன்                  - தம்புரா

இடம்: ஸ்ரீ கணேஷ் சேவா சமாஜ் [பதிவு]  

ஸ்ரீ காருண்ய கணபதி ஆலயம், பாக்கெட்-ஏ, மயூர் விஹார் phase-II, டெல்லி-110091

போன்: 22783682, 9868399027, 9811294658

நேரம்: மாலை 6.00 மணி.

மேலும் விவரங்களுக்கு காண்க: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/50cf19436d52e3f

Today in History

கிமு 4004 - அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.

1946 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

1850 - முதல் தேசிய பெண்ணுரிமை கழகம் அமெரிக்காவின் மாஸ்சகுசெட்ஸில் துவங்கப்பட்டது

2001 - அப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட் வெளியிடப்பட்டது.

2004 - பிரேசில் VSB-30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.

சிறப்பு நாள்: இயற்பியல் - மோல் நாள் (Mole Day)

இன்றைய கண்டுபிடிப்பு:

 

ஐப்பாடு (iPod) என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க இசைகேளி (music player) ஆகும்.

இக்கருவியை அக்டோபர் 23, 2001ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். 2008 இல் அசையாநினைவகம் (flash) மற்றும் வன்நினைவகம் (hard disk) கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான "ஐபோட் டச்", தொடு திரை வசதி பெற்றுள்ளது. ஐப்பாடுகளை யு.எஸ்.பி பெருங்கிடங்காகவும் (USB Mass Storage Device) பயனபடுத்த முடியும். அதன் கொள்ளளவு வெவ்வேறு வகைகளுக்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது. ஐ-டியூன்ஸ் (iTunes) மென்பொருள் மூலம் பாடல்கள், படங்களைப் பதியலாம். இந்த ஐட்டியூன்ஸ் மென்பொருளை ஆப்பிள் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இக்கருவியை ஜொனத்தன் ஐவ் ஓராண்டு காலத்தில் உருவாக்கினார். இவர் தான் ஐப்போன் தயாரிக்கவும் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பாடின் விசைகளைக் கொண்டு இயக்காமல் சொடுக்குச் சக்கரத்தைக் கொண்டு இயக்க வேண்டும்.

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

442

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

utRRan-Oy n-iikki uRAamai muRkAkkum

petRRiyArp paeNik koLal.

Cherish the all-accomplished men as friends,

Whose skill the present ill removes, from coming ill defends.

பொருள்

Meaning

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

இன்றைய பழமொழி

Today's Proverb

ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்

aadath thireyathaval maedaii kONal enRaLAm.

She who cannot dance says the stage is imperfect.(Literal)

 

Meaning

A bad workman blames his tools.

இன்றைய சொல்

Today's Word

எண்ணர் பெ.

eNNar

பொருள்

Meaning

1.  கணிதவியலார் (kaNithaviyalAr)

2.  அளவையியலார் (aLavaiyiyalAr)

1.  Mathematicians

2.  Logicians

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: