Friday, July 15, 2011

Daily news letter 15-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam- இன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம்

இன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம். காமராஜ்  எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை

சொத்து சுகம் நாடார்

சொந்தந்தனை நாடார்

பொன்னென்றும் நாடார்

பொருள் நாடார்

தான்பிறந்த அன்னையையும் நாடார்

ஆசைதனை நாடார்

நாடொன்றே நாடித் தன்

நலமொன்றும் நாடாத

நாடாரை நாடென்றார்

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௩ய (30) , வெள்ளிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

தூங்கெயில் கதவம் என்பது சங்க காலத்தில் கடவுள் அஞ்சி என்ற அரசனால் கட்டப்பட்ட, வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

மன்மோகன், சோனியா நேரில் பார்த்து ஆறுதல்  தினமணி 

பணவீக்கம் 9.44 சதவீதமாக உயர்வு  தினமணி

பத்மநாப சுவாமி கோயிலில் பொக்கிஷங்களை பாதுகாக்க நிபுணர் குழு ... தினகரன்

'பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது' வெப்துனியா

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : பேச்சில் மீண்டும் தோல்வி தினமலர்

ஜெயித்தால் நம்பர் 1 இங்கிலாந்து உற்சாகம் தினகரன்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் பதவியேற்பு  தினத் தந்தி

விரைவில் அமைச்சரவை மாற்றம்: எகிப்து பிரதமர் தினமணி

மரபணு சோதனைக்கு என்னை கட்டாயப்படுத்த கூடாது: என்.டி.திவாரி நக்கீரன்

திரிபோலியை தகர்க்க கடாபி திட்டம்! ரஷ்யா அதிர்ச்சி தகவல்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

 

11.கடற்கரையிலே கண்டி மன்னன்

இலங்கை என்று வழங்கும் ஈழநாடு இயற்கை வளம் வாய்ந்த நாடு. அங்குச் சிங்களவரோடு தமிழரும் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்கள். பரராஜசிங்கன் என்ற அரசன் அந் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; காவிரி நாட்டை நோக்கினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்தி லிருந்த நெல் கப்பலேறியது; யாழ்ப்பாணத் துறையில் வந்து மலைபோற் குவிந்தது. அதை கண்டான் அரசன்; கடற்கரையில் நின்று களிப்புடன் பேசலுற்றான்:-

"தென் இலங்கைத் திருநகரே! சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழும் இந் நாட்டில் என்றும் இல்லாத பஞ்சம் இன்று வந்து சேர்ந்தது. மாதம் மூன்று மழையுள்ள நாட்டில் பத்து மாதமாக ஒரு துளி மழையில்லையே! பயிர் முகங் காட்டும் கழனிகள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. வாழும் உயிர்கள் எல்லாம் வற்றி உலர்ந்து வானத்தையே நோக்கி நிற்கின்றன. காவலன் என்று பேர் படைத்த நான், நாடு படுந் துயரத்தைக் கண்டு நலிவுற்றேன்; கண்டிமா நகரிலுள்ள கண்கண்ட தெய்வமாகிய கண்ணகியை வேண்டினேன்.

'தாயே! பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில், வானம் பொய்யாது, வளம் பிழைப்பறியாது என்று இளங்கோவடிகள் பாடினாரே! கற்புத் தெய்வமாகிய நீ கோயில் கொண்டிருக்கும் நாட்டிலே இக் கொடுமை நிகழலாமா? நெஞ்சறிய ஒரு பிழையும் நான் செய்தறியேனே! வஞ்சமின்றி வாழும் என் குடிகள் பஞ்சத்தின் வாய்ப்பட்டு வருந்துதல் தகுமோ? அன்னையே! நானும் இந் நாடும் உன் அடைக்கலம்' என்று முறை யிட்டேன். அன்றிரவு சற்றுக் கண்ணயர்ந்தேன்; ஒரு காட்சி கண்டேன். எண்ணறந்த கப்பல்கள் தமிழ் நாட்டிலிருந்து நெல் மூடைகளைக் கொணர்ந்து இந்த யாழ்ப்பாணக் கரையிலே இறக்கிக்கொண்டிருக்கக் கண்டேன்; கண் விழித்தேன். கப்பலும் இல்லை; நெல்லும் இல்லை; கனவிற் கண்ட காட்சி என்று உணர்ந்தேன்; கவலையுற்றேன். ஆயினும், அக் கனவு வீணாகப் போகவில்லை. ஈழநாட்டின் துயரம் தீர்ப்பது சோழநாட்டின் உரிமையன்றோ என்று சிந்தித்தேன். சோழநாடு காவிரி பாயும் வளநாடு. குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் பலர் அந் நாட்டில் வாழ்கின்றனர். இல்லையென்று சொல்லாமல் எல்லை யின்றிக் கொடுக்கும் நல்லார் பலர் அங்குள்ளார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் வாடாத பாமாலை பெற்ற வள்ளல்; சடையாது கொடுக்கும் சடைய வள்ளல். அவரிடம் இந் நாட்டின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு ஆறாம் நாளில் வந்தது ஆயிரம் கப்பல். அதோ! குன்று போலக் குவிந்திருக்கின்றதே அவர் அனுப்பிய நெல்! அந்த நெல்லிலே ஒரு கல்லுண்டா? கலப்புண்டா? பதருண்டா? பச்சை யுண்டா? அதை அள்ளிப் பார்ப்பவரெல்லாம் துள்ளி மகிழ்கின்றார்களே! இன்றுதான் இந் நாட்டார் முகத்தில் புன்னகை தவழக் கண்டேன்; என் மனக் கவலை விண்டேன்.

"தகை சான்ற தனி நகரே! தக்கோர் வாழும் நாடு தமிழ்நாடு என்று அறிவின்மிக்கோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதன் உண்மையை இன்று அறிந்தேன். தமிழ் நாட்டு வள்ளல், காலத்தில் உதவி செய்து நம்மை காப்பாற்றினார். கருணையே உருவாகிய அப் பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லோம்? உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவ ரல்லரோ? உயிர் தந்த ஒருவனை 'அம்மையே, அப்பா, ஒப்பிலாமணியே' என்று நாம் எந் நாளும் போற்றுவோம். அவ் வள்ளலார் குலம் வாழையடி வாழைபோல் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவோம். அவர் நாட்டிலுள்ள காவிரியாறு இன்று போலவே என்றும் வளமுறத் திகழும் வண்ணம் ஆண்டவன் திருவருளை வேண்டுவோம்.

"அருள் பூத்த தமிழ் நகரே! காவிரி நாட்டின் கண்ணெனத் திகழும் தில்லையம்பதியிலே எம்மை யாளுடைய ஈசன்-மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வன்-ஆனந்தக் கூத்தாடுகின்றான். அப் பெருமான் ஆடுகின்ற அம்பலத்தை, 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்று ஆன்றோர் பாடினர். காவிரியாற்றின் நடுவே கருணைமா முகிலாகிய திருமால் ஆனந்தமாய்க் கண்வளர்கின்றார். அவர் பள்ளிகொள்வதற்கு என்ன தடை? நாடு செழித்திருக்கின்றது; அறம் தழைத்திருக்கின்றது; எல்லோரும் இன்புற்று வாழ்கின்றார்கள். ஆதலால், காக்கும் கடமையுடைய பெருமாள் கவலையற்றுத் திருவரங்கத்திலே கண்வளர்கின்றார். காவிரி நாட்டிலுள்ள அமைதியைக் காட்டுகின்றது அவர் திருக்கோலம். எனவே, ஆனந்தக் கூத்துக்கும் ஆனந்த சயனத்துக்கும் அடிப்படையான காரணம் சோழ நாட்டு வளமே யன்றோ? இத் தகைய வள நாட்டில் +தரும தேவதைபோல் விளங்கும் வள்ளல் தழைத்து ஓங்கி வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.

 +"இரவு நண்பகல் ஆகி லென், பகல்

      இருள றாஇர வாகிலென்,

இரவி எண்திசை மாறி லென்கடல்

      ஏழும் ஏறிலென், வற்றிலென்?

மரபு தங்கிய முறைமை பேணிய

      மன்னர் போகிலென்; ஆகிலென்? வளமை இன்புறு சோழ மண்டல

      வாழ்க்கை காரண மாகவே,

கருது செம்பொனின் அம்ப லத்திலே

      கடவுள் நின்று நடிக்குமே!

காவி ரித்திரு நதியி லேஒரு

      கருணை மாமுகில் துயிலுமே!

தருவு யர்ந்திடு புதுவை யம்பதி

      தங்கு மானிய சேகரன்,

சங்க ரன்தரு சடையன் என்றொரு

      தரும தேவதை வாழவே!"

      - பெருந் தொகை, 1135 .

 "கலைமணக்கும் தலைநகரே! செந்தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் தொந்தம் மிகவுண்டு. ஈழநாட்டு ஆதியரசருள் ஒருவன் பாண்டி மன்னன் திரு மகளை மணந்து வாழ்ந்தான். சேரநாட்டரசன் வஞ்சிமா நகரில் நடத்திய கண்ணகி விழாவில் இந் நாட்டுக் கஜபாகு மன்னன் கலந்து கொண்டான். அன்று தொட்டு கண்டி முதலாய பல நகரங்களில் பத்தினித் திருநாள் நடைபெற்று வருகின்றது; அன்றியும், இந் நாட்டுக் கடற்கரையிலுள்ள கோணமலையில் திருக்கோயில் அமைத்து அதைத் +திருக்கோணமலை யாக்கியவர் தமிழர் அல்லரோ? கருங்கடலை நோக்கி வளைந்துள்ள மலையைக் கோணமலை என்று பெயரிட் டழைத்த தமிழரின் அறிவு நலம் வியக்கத்தக்க தன்றோ?

--------------

திருக்கோணமலை இப்போது Trincomalle (டிரிங்காமலி) என மருவி வழங்குகின்றது.

"தமிழ் மணக்கும் திருநகரே! இவையெல்லாம் உண்மையே எனினும், நீயே இலங்கை நாட்டின் தொன்னகரம்; தமிழர் வாழும் நன்னகரம். உன் கடற்கரையிலே குவிந்துகிடந்த பெருமணலைக் கண்டு, மணவை என்று முன்னையோர் உனக்குப் பெயரிட்டார்கள். இப்போது யாழ்ப்பாணம் என்ற அழகிய பெயரைத் தாங்கி நிற்கின்றாய் நீ! யாழ்ப் பாணர் என்பார் தமிழ்நாட்டுப் பழங்குலத்தார். செவிக்கினிய யாழிலே பண்ணொடு பாட்டிசைத்து இசையின்பம் விளைவித்தவர் அவரே! நாளும் இன் னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் காலத்தில் யாழ்ப்பாணர் குலத்திலே திருநீலகண்டர் என்னும் இசைவாணர் தலைசிறந்து விளங்கினர். தேவாரப் பாட்டைப் பண்முறையில் அமைத்துப் பாடியவர் அவரே! இத் தகைய பெருமை வாய்ந்த யாழ்ப் பாணர்கள் உன்பால் வந்து குடியேறினார்கள்; கடற்கரையில் அமர்ந்து பண்ணார்ந்த பாட்டிசைத்தார்கள் மேடும் காடுமாய்க் கிடந்த உன்னைப் பண்படுத்தி னார்கள். அப்போது நீ புதுப்பெயர் பூண்டாய். யாழ்ப்பாணர் திருத்திய காரணத்தால் யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றாய். அன்று முதல் உன் இசையும் இயலும் வளர்ந்தோங்கி வருகின்றன.

"வசை தீர்த்த வளநகரே! தமிழ் நாட்டு வள்ளல் அனுப்பிய நெல், இத் தமிழ் நகரத்தில் வந்து சேர்ந் தது சாலப்பொருத்த முடையதன்றோ? இந் நெல்லை அள்ளும்பொழுதும், அளக்கும்பொழுதும், உண வாக்கி உண்ணும்பொழுதும் தமிழ் அன்னத்தால் உயிர்வாழ்கின்றோம் என்ற உணர்ச்சி ஒவ்வொரு வருக்கும் உண்டாகும். அவ்வுணர்ச்சியால் எழுகின்ற நன்றி, ஈழநாட்டுக்கு என்றும் நலமளிப்பதாகும்.

"இசைவாணர் கண்ட மணிநகரே! உன்னால் இந் நாட்டுக்கு வந்த துன்பம் தீர்ந்தது. வயிறார உணவுண்ணும் உயிர்கள் எல்லாம் உன்னை வாயார வாழ்த்துக! உன் திசைநோக்கி வணங்குக!" என்று கைக்கூப்பித் தொழுது விடைபெற்றான் கவலை தீர்ந்த கண்டி மன்னன்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.21

சூது

2.3.21

Gambling

குறள் எண்  931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

veNdaRkka venridinum soothinai venRathuvum

thoNdiRpon meenvizhunki atRu

Seek not the gamester's play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.

பொருள்

Meaning

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.

Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.

இன்றைய பொன்மொழி

நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும் திறந்து வரவேற்பு அளிக்கும்.

Member to Members

1.    If you know some details about this book please send info to  rmk@aryacom.com . Raga chikitcha:-  I am on the look out for a  book    titled: Raga chikitcha" Many Hundreds of years before our forefathers have written the effect of various ragas and their medicinal aspect in curing various diseases. Some one can help me to get a copy or inform the site to get further details. Meena Venki

2.    இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும்.

3.    . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள்  பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள  இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து  அளிக்கும் பணியினை  அவ்வை தமிழ்ச் சங்கம்  செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல்வலைத்தள முகவரி,   தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: