Wednesday, March 2, 2011

Daily news letter ௦02-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நடந்து கொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவச்  செல்வங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
உங்கள் உழைப்பே உங்கள் சக்தி!  உண்மையே உயர்வு!!  வாழ்க வளமுடன்!!!

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 18, புதன்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://kalvimalar.dinamalar.com/home.asp

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை தேர்வு செய்யவும், சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Music & Concerts » Spiritual & Devotional@ IIT, Delhi Sufi Songs by Mohan Gopal Singh

Sufi Songs by Mohan Gopal Singh. Org. by Spic Macay Foundation. Venue - Aravali Hostel, IIT, New Delhi. As part of Fest 2011 - Spic Macay. 

Music & Concerts » Spiritual & Devotional@ Amaltas Hall-Ishq Haqiqi-Ishq Majazi - Sufi Music Concert

Ishq Haqiqi-Ishq Majazi - Sufi Music Concert with renowned sufi Singer Ustad Sufi Bawra and troupe. 

CHENNAI

Music & Concerts » Spiritual & Devotional@ Sri Karpaga Vinayagar Temple-Inauguration - Maha Sivarathri Akhandam

Naadhabrahmam : Inauguration of Maha Sivarathri Akhandam, Madras High Court judge K.Venkataraman participates. 

Music & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani-Namasankirthanam by Dr. R. Ganesh & party

முக்கிய செய்திகள் – Top Stories

தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13-ல் வாக்குப் பதிவு

'மக்கள் என் பக்கம்'! - முழங்கும் கடாபி

சோனியாவுடன், காங்கிரஸ் ஐவர் குழு ஆலோசனை  

சிதம்பரம் நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்

பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைப்பு: முதல்வர் கருணாநிதி

மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் ...

ஏப்.15 திருநங்கையர் தினம் முதல்வர் உத்தரவு

மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் விசாரணை குழு இந்தியா வர அனுமதி

சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்வு

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

 

986 - பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.

1807 - அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.

1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1836 - டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1855 - இரண்டாம் அலெக்சாண்டர் ரஷ்யாவின் சார் மன்ன்னாக முடிசூடினான்.

1896 - எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் காலனித்துவ நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1917 - புவேர்ட்டோ ரிக்கன்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

1919 - அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.

1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.

1935 - சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.

1946 - ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரானார்.

1956 - மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

1962 - பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1970 - ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.

1972 - நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.

1992 - உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகியன ஐநாவில் ணைந்தன.

1995 - யாஹூ! தொடங்கப்பட்டது.

1998 - ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

2002 - ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.

பிறப்புக்கள்

1896 - ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)

1931 - மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர்

1935 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)

இறப்புக்கள்

1791 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703)

1930 - டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885)

1949 - சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள்எண்  831

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.

paedhaimai enbathonRu yAthenin aethangoNdu

uthiyam pOga vidal

Familiarity What one thing merits folly's special name.

Letting gain go, loss for one's own to claim!.

பொருள்

Meaning

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

இன்றைய பொன்மொழி

குரு பார்வையில் கோடி பாவம் விலகும்.       

இன்றைய சொல்(Today's Word)

ஒல்லை

ol-lai

பொருள்

Meaning

1.        விரைவில், தாமதமின்றி

2.        பழமை

1.     quickly,promptly

2.     oldness,antiquity

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: