Saturday, November 29, 2008

Daily news letter 29-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam. ( Kalaivanar N.S.Krishnan Birthday)

நவம்பர்-29, ஸர்வதாரி கார்த்திகை 14, ஜில்ஹாயிதா -30 (கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள்)
Today in History: November-29
1877 - Thomas Edison demonstrates his phonograph for the first time.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_29
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.2. புலால் மறுத்தல் Abstinence from Flesh

252. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.
No use of wealth have they who guard not their estate;No use of grace have they with flesh who hunger sate.
Meaning :
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
தினம் ஒரு சொல்
இடித்தடு - பிட்டு, a loose confectionery made up of flour
பொன்மொழி (சிந்திக்க !!)
வெறும் சொற்கள் எந்தக் கடனையும் தீர்ப்பதில்லை
நகைச்சுவை ( சிரிக்க!!)
Bed Time
One night a father sent his kid to bed. Five minutes later the boy screamed, ''Dad! Can you get me a glass of water!?!'' ''No. You had your chance.'' A minute later the boy screamed ''Dad!! Can you get me a glass of water?'' ''No. You had your chance. Next time you ask I'll come up there and spank you.'' ''Dad! When you come up to spank me can you bring me a glass or water?''

Friday, November 28, 2008

Daily news letter 28-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

மும்பையில் நடந்துகொண்டிருக்கும் இக்கொடுமையான சம்பவத்திற்கு அவ்வை தமிழ்ச் சங்கம் வருந்துகிறது. இச் சம்பவத்தில் பலியான அனைத்து மக்களுக்கும் எங்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம். உயிரைத் துச்சமாக மதித்து மக்களின் நலனிற்காக போராடும் அரசாங்க ஊழியர்கள், தாஜ், ஓபராய் நிறுவன ஊழியர்கள், காவல் துறை, இராணுவம், கப்பல்படை வீரர்களை வணங்கி இன்றைய குறளை அவர்களுக்குச் சமர்பிக்கிறோம்.
நவம்பர்-28, ஸர்வதாரி கார்த்திகை 13, ஜில்ஹாயிதா -29 ( tomorrow the kural no. 252 will continue)
இன்றைய குறள்
2. பொருட்பால் (Wealth) – அரசியல் (Royalty)
2.1.25 இடுக்கண் அழியாமை (Hope in Mishap)
623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.
Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart.
Meaning :
துன்பம் சூழும்போது , துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

Thursday, November 27, 2008

Daily news letter 27-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Please Respond Immediately: If you know any “Kolam” experts in Delhi NCR who can draw Kolam inside water OR Kolam on the water surface let us know immediately. We need their help for our January Event

நவம்பர்-27, ஸர்வதாரி கார்த்திகை 12, ஜில்ஹாயிதா -28
Today in History: November-27
1964 - Cold War: Indian Prime Minister Jawaharlal Nehru appeals to the United States and the Soviet Union to end nuclear testing and to start nuclear disarmament, stating that such an action would "save humanity from the ultimate disaster".
2001 - A hydrogen atmosphere is discovered on the extrasolar planet Osiris by the Hubble Space Telescope, the first atmosphere detected on an extrasolar planet.
Birth
1878 - Jatindramohan Bagchi, Indian (Bengali) poet (d.1948).
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_27
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.2. புலால் மறுத்தல் Abstinence from Flesh

251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்
How can the wont of 'kindly grace' to him be known,Who other creatures' flesh consumes to feed his own?

Meaning :
தன் உடலை வளர்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.
தினம் ஒரு சொல்
இடலம் - விசாலம், பரப்பு, Width
பொன்மொழி (சிந்திக்க !!)
அழகற்ற மனதைவிட, அழகற்ற முகம் நல்லதே.
நகைச்சுவை ( சிரிக்க!!)
Father: Your teacher says she finds it impossible to teach you anything!

Son: That's why I say she's no good!

Saturday, November 22, 2008

Daily news letter 22-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-22, ஸர்வதாரி கார்த்திகை 7, ஜில்ஹாயிதா -23
Today in History: November-22
1943 - Lebanon gains independence from France.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_22
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.
When souls unwise true wisdom's mystic vision see,The 'graceless' man may work true works of charity.
Meaning :
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
தினம் ஒரு சொல்
இடபம் - எருது, BULL
பொன்மொழி (சிந்திக்க !!)
அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை பிரிவின் போதுதான் உணரமுடியும்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
A teacher was giving a lesson on the circulation of the blood. Trying to make the matter clearer,she said,
"Now, class, if I stood on my head, the blood, as you know, would run into it, and I would turn > > > red in the face.."
"Yes," the class said."Then why is it that while I am standing upright in the ordinary position the blood doesn't run into my feet?"
A little fellow shouted, "Cause your feet is not empty."

Friday, November 21, 2008

Daily news letter 21-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Daily news letter 21-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam நவம்பர்-21, ஸர்வதாரி கார்த்திகை 6, ஜில்ஹாயிதா -22 (சர். சி. வி. ராமன் நினைவு நாள்)
Today in History: November-21

1905 - Albert Einstein's paper, "Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?", is published in the journal "Annalen der Physik". This paper reveals the relationship between energy and mass. This leads to the mass–energy equivalence formula E = mc².
1971 - Indian troops partly aided by Mukti Bahini (Bengali guerrillas) defeat the Pakistan army in the Battle of Garibpur.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
Meaning :
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான். மீண்டும் பெற இயலாது.
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
தினம் ஒரு சொல்
இடங்கம் - உளி , CHISEL
பொன்மொழி (சிந்திக்க !!)
களங்கமற்ற மனது மிகச் சிறந்த அறிவாற்றலைவிட மேலானது. முகம் மனதின் ஓவியம். கண்கள் அதன் தூதுவர்கள்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
What will you call a person who is leaving India ?? Ans:- Hindustan Lever (Leaver).
==============

Thursday, November 20, 2008

Daily news letter 20-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-20, ஸர்வதாரி கார்த்திகை 5, ஜில்ஹாயிதா -21
Today in History: November-20

1984 - The SETI Institute is founded. The SETI Institute is a not-for-profit organization researching the possibilities of life beyond Earth, a scientific discipline known as astrobiology. The mission of the SETI Institute is to “explore, understand and explain the origin, nature and prevalence of life in the universe”.
1985 - Microsoft Windows 1.0 is released.
BIRTH
1750 - Tipu Sultan, Indian ruler (d. 1799)
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_20
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
As to impoverished men this present world is not;The 'graceless' in you world have neither part nor lot.
Meaning :
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையாது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
தினம் ஒரு சொல்
இட்டிடை - சிறிய இடை, SLENDER WAIST
பொன்மொழி (சிந்திக்க !!)
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. – லெனின்
நகைச்சுவை ( சிரிக்க!!)
Advt from parachute company:
No one has ever complained of our parachute not opening..

Tuesday, November 18, 2008

Daily news letter 18-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-18, ஸர்வதாரி கார்த்திகை 3, ஜில்ஹாயிதா -19 (வ. உ.சிதம்பரனார். நினைவு நாள்.)
Today in History: November-18

1926 - George Bernard Shaw refuses to accept the money for his Nobel Prize, saying, "I can forgive Alfred Nobel for inventing dynamite, but only a fiend in human form could have invented the Nobel Prize."
2003 - The congress of the Communist Party of Indian Union (Marxist-Leninist) decides to merge the party into Kanu Sanyal's CPI(ML).
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.
Gain of true wealth oblivious they eschew,Who 'grace' forsake, and graceless actions do.
Meaning :
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவார்.
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)
தினம் ஒரு சொல்
இட்டிகை - செங்கல், BRICK
பொன்மொழி (சிந்திக்க !!)
பொறுமையாக இருப்பது கடினம்தான். அதன் முடிவோ சமாதானம்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
Teacherer: "Can you tell me how many seconds we have in a year..",Student: 264 sir…
Teacher: How?
Student, In every month we have 22 seconds ( for eg January Second and January twenty second) Add al this sir..

Saturday, November 15, 2008

Daily news letter 15-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-15, ஸர்வதாரி ஐப்பசி 30, ஜில்ஹாயிதா -16
Today in History: November-15

1949 - Nathuram Godse and Narayan Apte are executed for assassinating Mahatma Gandhi.
1971 - Intel releases world's first commercial single-chip microprocessor, the 4004.
2008 - The Tricolour has Landed in Moon.

For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_14
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கரி.
The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know.
Meaning :
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.
தினம் ஒரு சொல்
இஞ்சை - கொலை,MURDER
பொன்மொழி (சிந்திக்க !!)
சுவைக்கு அடிமையானவன் நோயின் கிடங்காவான்.
நகைச்சுவை ( சிரிக்க!!) http://funpagesforyou.blogspot.com/2007/06/two-lines-joke.html
Height of Optimism...Soldier: "Sir, we are surrounded by the enemies",Major: "Excellent ! We can now attack them in any direction" !.
நம்பிக்கையின் உயரம்
ராணுவ வீரர்: சார்! எதிரிகள் நம்மை நாலா பக்கமும் சூழ்ந்து விட்டார்கள்.
அதிகாரி : நல்லதாக போச்சு !! இப்ப நாம எந்த பக்கத்திலிருந்து வேணா சண்டை போடலாம். ==============

Friday, November 14, 2008

Daily news letter 14-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Children’s Day)

World Diabetes Day: World Diabetes Day is the primary global awareness campaign of the diabetes world. It was introduced in 1991 by the International Diabetes Federation and the World Health Organization in response to the alarming rise of diabetes around the world.

நவம்பர்-14, ஸர்வதாரி ஐப்பசி 29, ஜில்ஹாயிதா -15(குழந்தைகள் தினம்)
Today in History: November-14

1922 - The BBC begins radio service in the United Kingdom.
Birth
1889 - Jawaharlal Nehru, First Prime Minister of India (d.1964)"
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_14
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயர் அஞ்சும் வினை.
Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel.
Meaning :
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடையமாட்டார்கள்.
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)
தினம் ஒரு சொல்
இசைமை - 1. புகழ், Fame, 2. ஒலி, Sound
பொன்மொழி (சிந்திக்க !!)
கோழைகள் ஒழுக்கத்தை பின்பற்ற முடியாது.
நகைச்சுவை ( சிரிக்க!!) http://funpagesforyou.blogspot.com/2007/06/two-lines-joke.html
"Laziness is our biggest enemy" -Jawaharlal Nehru.
"We should learn to love our enemies"- Mahathma Gandhi.
Which one to follow?... Great confusion.
"சோம்பலே நமக்கு முக்கிய எதிரி" - ஜவஹர்லால் நேரு
"எதிரியிடம் அன்பு காட்டக் கற்றுக்கொள் - மஹாத்மா காந்தி.
யார் பேச்சைக் கேட்பது ?????

Thursday, November 13, 2008

Daily news letter 13-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Guru Nanak Jayathi)

நவம்பர்-13, ஸர்வதாரி ஐப்பசி 28, ஜில்ஹாயிதா -14 (குருநானக் ஜெயந்தி)
Today in History: November-13

1841 - James Braid first sees a demonstration of animal magnetism, which leads to his study of the subject he eventually calls ” hypnosis”.
1990 - The World Wide Web first began.
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_13
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)

243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.
They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides.
Meaning :
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
தினம் ஒரு சொல்
இசைப்பொறி - காது, EAR
பொன்மொழி (சிந்திக்க !!)
மூளையையும் கையையும் ஒன்றாக செயல்படுத்துபவர்களைப் பார்த்து உலகம் வணங்கும்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
COURT JOKES
Judge: "Well, I have reviewed this case and I've decided to give your wife Rs.5000 a month as support money."
Husband: "That's fair, your honor. I'll try to send her a few bucks myself."
நீதிபதி: உன் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூபாய் 5000 தரவேண்டுமென்பது என்னுடைய முடிவு.
கணவன்: நன்றி! நீதிபதி அவர்களே. நானும் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன்.

Wednesday, November 12, 2008

Daily news letter 12-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-12, ஸர்வதாரி  ஐப்பசி  27, ஜில்ஹாயிதா -13

Today in History: November-12

 Birth

Sir Chetpat Pattabhirama Ramaswami Iyer, KCSI, KCIE until 1948 (12 November 1879–26 September 1966) was an Indian administrator noted for his progressive yet authoritarian rule. He served as the Dewan of Travancore from 1936 to 1947.

"For more on what happened today please visit  http://en.wikipedia.org/wiki/November_12

இன்றைய குறள்

அறத்துப்பால் - Virtue  ( துறவறவியல் - Ascetic Virtue)

1.3.1 அருளுடைமை (Compassion)

242. நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அ·தே துணை.

The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.

Meaning :

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணியை விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)  

தினம் ஒரு சொல்

இச்சகம் - வெற்றுப் புகழ்ச்சி , முகஸ்துதி, FLATTERY

பொன்மொழி (சிந்திக்க !!)

பழக்கமாவதற்கு முன் எல்லா காரியங்களும் கடினமாகவே தெரியும்.

 நகைச்சுவை ( சிரிக்க!!)

  Two Psychiatrists  

   How do two psychiatrists greet each other?

''You are fine, how am I?''

இரண்டு மனோதத்துவ நிபுணர்கள் சந்தித்தால் ஒருவரை ஒருவர் எப்படி நலம்  விசாரிப்பார்கள்?

" நீங்கள் நலமாக இருக்கிறீர்கள்! நான் நலமா?"

Tuesday, November 11, 2008

Daily news letter 11-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-11, ஸர்வதாரி  ஐப்பசி  26, ஜில்ஹாயிதா -12 (ஜெகதிஸ் சந்திர போஸ் நினைவு நாள்)

Today in History: November-11

1962 - Kuwait's National Assembly ratifies the Constitution of Kuwait.

1865 - Treaty of Sinchula is signed in which Bhutan ceded the areas east of the Teesta River to the British East India Company.

"For more on what happened today please visit  http://en.wikipedia.org/wiki/November_11

இன்றைய குறள்

அறத்துப்பால் - Virtue  ( துறவறவியல் - Ascetic Virtue)

1.3.1 அருளுடைமை (Compassion)

241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.

Meaning :

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.

The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.

 தினம் ஒரு சொல்

இகுளை - பெண்ணின் தோழி, woman's confidante

பொன்மொழி

அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்க முடியாது.

விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி

Joke of the day

Phil: “Is your new horse well-behaved Charles?”
Charles: “Oh, yes Phil. When we come to a fence, he stops and lets me go over first.”

ஒரு நிமிஷத்தில 130 பெயர்களை சொல்லமுடியுமா?

ம்.. கஷ்டந்தான், உன்னால முடியுமா?

கேட்டுக்கோ, 100முஹமது, 9தாரா, 6முகம், 7மலை, 5சலி , and 3ஷா . கூட்டி பாரு கணக்கு சரியா வரும்

Monday, November 10, 2008

Daily news letter 10-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-10, ஸர்வதாரி  ஐப்பசி  25, ஜில்ஹாயிதா -11

Today in History: November-10

1940 - Walt Disney begins serving as an informer for the Los Angeles office of the FBI; his job is to report back information on Hollywood subversives.

"For more on what happened today please visit  http://en.wikipedia.org/wiki/November_10

இன்றைய குறள்

அறத்துப்பால் - Virtue  இல்லறவியல் - Domestic Virtue)

1.2.20. புகழ் (Renown)

240. வசையழிய வாழ்வாரே வாழ்வார் இசையழிய

வாழ்வாரே வாழா தவர்.

Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem

Meaning :

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

Those live who live without disgrace. Those who live without fame live not.

 தினம் ஒரு சொல்

இகழுநர்  -  பகைவர் - ENEMIES

பொன்மொழி

பண்புள்ள மனிதன் உலகத்தைக்கூட வென்று விடுவான். 

Saturday, November 8, 2008

Daily news letter 8-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-8, ஸர்வதாரி ஐப்பசி 23, ஜில்ஹாயிதா -9
Today in History: November-8

1895 - While experimenting with electricity, Wilhelm Röntgen discovers the X-ray.
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_8
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)
239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown.
Meaning :
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.
The ground which supports a body without fame will diminish in its rich produce.
தினம் ஒரு சொல்
இகலியார் - பகைவர் - ENEMIES
பொன்மொழி
உயரவேண்டுமானால் பணிவு வேண்டும்.

Friday, November 7, 2008

Daily news letter 7-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-7, ஸர்வதாரி ஐப்பசி 22, ஜில்ஹாயிதா -8 (திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள்)
Today in History: November-7

1665 - The London Gazette, the oldest surviving journal, is first published.
1910 - The first air freight shipment (from Dayton, Ohio, to Columbus, Ohio) is undertaken by the Wright Brothers and department store owner Max Moorehouse.
BIRTH
1888 - Sir C. V. Raman, Indian physicist, Nobel Prize laureate (d. 1970)
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)
238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.
Fame is virtue's child, they say; if, then,You childless live, you live the scorn of men.
Meaning :
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழை பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
தினம் ஒரு சொல்
இகலன் - நரி, JACKAL
பொன்மொழி
உழைப்பும் நேர்மையும் உயர்வுக்கு வழிகள்

Thursday, November 6, 2008

Daily news letter 6-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-6, ஸர்வதாரி ஐப்பசி 21, ஜில்ஹாயிதா -7
Today in History: November-6
1913 - Mohandas Gandhi is arrested while leading a march of Indian miners in South Africa.
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_6
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)
237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
If you your days will spend devoid of goodly fame,When men despise, why blame them? You've yourself to blame.
Meaning :
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
தினம் ஒரு சொல்
இகந்துழி - தொலைவில் உள்ள இடம், A FAR-OFF PLACE
பொன்மொழி
தம்மைத் தாமே ஆளாதவன் தமக்குத் தாமே பகைவன்

Wednesday, November 5, 2008

Daily news letter 5-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-5, ஸர்வதாரி ஐப்பசி 20, ஜில்ஹாயிதா -6
Today in History: November-5

1945 - Colombia joins the United Nations.
2007 - China's first lunar satellite, Chang'e 1 goes into orbit around the Moon.
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_5
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)

236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.
If man you walk the stage, appear adorned with glory's grace;Save glorious you can shine, 'twere better hide your face.
Meaning :
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.
தினம் ஒரு சொல்
ஆனிரை - பசுக்கூட்டம், HERD OF COWS
பொன்மொழி
வேலையைவிட அதிக களைப்பை அளிப்பது சோம்பல்.

Tuesday, November 4, 2008

Daily news letter 4-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-4, ஸர்வதாரி ஐப்பசி 19, ஜில்ஹாயிதா -5
Today in History: November-4

2003 - The most powerful solar flare as observed by satellite instrumentation is recorded.
BIRTH DAY
1845 - Vasudeo Balwant Phadke, Indian revolutionary (d. 1883)
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_4
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)


235. நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.
Loss that is gain, and death of life's true bliss fulfilled,Are fruits which only wisdom rare can yield.
Meaning :
துன்பங்களுக்கிடையே கூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.
தினம் ஒரு சொல்
ஆனகம் - துந்துபி, A LARGE DRUM
பொன்மொழி
ஒழுக்கமுள்ள இடத்தில் அழகு ஒளி செய்யும்.

Monday, November 3, 2008

Daily news letter 3-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-3, ஸர்வதாரி ஐப்பசி 18, ஜில்ஹாயிதா -4
Today in History: November-3
1838 - The Times of India, the world's largest circulated English language daily broadsheet newspaper is founded as The Bombay Times and Journal of Commerce.
1913 - The United States introduces an income tax.
1918 - Poland declares its independence from Russia.
1978 - Dominica gains its independence from the United Kingdom.
1988 - Sri Lankan Tamil mercenaries try to overthrow the Maldivian government. At President Maumoon Abdul Gayoom's request, the Indian military suppresses the coup attempt within 24 hours.
BIRTH DAY
1618 - Aurangzeb, Mughal Emperor of India (d. 1707)
1933 - Amartya Sen, Indian economist, Nobel Prize laureate
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_3
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)


234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.
If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned.
Meaning :
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.
தினம் ஒரு சொல்
ஆனகம் - துந்துபி, A LARGE DRUM
பொன்மொழி
மனித தருமங்களுள் அடிப்படையான தருமம் அன்பு.

Saturday, November 1, 2008

Daily news letter 1-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நவம்பர்-1, ஸர்வதாரி ஐப்பசி 16, ஜில்ஹாயிதா -2 (கேரளா, ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் உருவான தினம்)
Today in History: November-1

1512 - The ceiling of the Sistine Chapel, painted by Michelangelo, is exhibited to the public for the first time.
1604 - William Shakespeare's tragedy Othello is presented for the first time, at Whitehall Palace in London.
1611 - William Shakespeare's romantic comedy The Tempest is presented for the first time, at Whitehall Palace in London.
1956 - Formation of Indian state of Andhra Pradesh with its capital as Hyderabad, formerly known as Nizam state.
1956 - Formation of Kerala state in India.
1973 - The Indian state of Mysore was renamed as Karnataka to represent all the regions within Karunadu . "For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_1
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.20. புகழ் (Renown)

233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die.
Meaning :
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.
தினம் ஒரு சொல்
ஆறல்பீறல் - பயனற்றது, that which is useless
பொன்மொழி
மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் இருக்கிறது.